Kelapa Natural

Kelapa Natural

Share

Welcome to Kelapa Natural Looking for moving into natural Cosmetics and Self sustainable living. We help you make them on your own, without any added Chemicals.

Skin care, soaps, hair care, nail care, energy foods/drinks, daily use products etc.

04/10/2026

🟣🟣🔵🔵🟡🟡
🟣🟣🔵🔵🟡🟡

*காந்தி ஜெயந்தி முன்னிட்டு*
*SPECIAL COMBO OFFER*

*Kelapa Natural*
*Traditional health mix*
================
*27 தானியங்கள் நிறைந்த பாரம்பரிய சத்துமாவு*
www.kelapanatural.com
===============
400g x 2 packets Rs.600/-
❌❌❌

🎁🎁🎁
*Gandhi jeyanthi Special Offer Combo Price*
*400g x 2 packets Rs.499/- ✅✅*
===============
👇👇👇
*Buy website link*
https://kelapanatural.com/product/27-millets-nuts-traditional-health-mix-11-combo/
===============
*Buy now*
*Ph: 90929 57654*
===============
உட்பொருட்கள்

1.தினை
2. ராகி
3. கம்பு
4.பச்சை பயிறு
5. கருப்பு உளுந்து
6.மக்காச்சோளம்
7.கருப்பு கொண்டைக்கடலை
8.வெள்ளை கொண்டைக்கடலை
9. கொள்ளு
10. கோதுமை
11. சோயாஸ்
12. மொச்சை
13. மாப்பிள்ளை சம்பா
14. கருப்பு கவுனி அரிசி
15.பூங்கார் அரிசி
16.சாமை
17. பார்லி
18. ஜவ்வரிசி
19. ராஜ்மா
20. வேர்கடலை
21. பொட்டுக்கடலை
22. எள்ளு
23. வெள்ளை மிளகு
24. பாதாம்
25. முந்திரி
26. வெள்ளை சோளம்
27. ஏலக்காய்
💐💐🙏🙏💐💐

02/10/2026

🔵🔵🟢🟢🔵🔵🟢🟢
================
https://www.instagram.com/reel/Dd_fb-7uF35/?stkn=MXVlYTZ0OWEzazhxbQ==
================
*தலைவலி தாங்க முடியலையா? 😣🤕*

*இதோ ஒரு எளிய வழி! 🌿✨*

தலைவலி வந்தவுடன் உடனே மாத்திரை எடுத்துக்கொள்வதற்கு முன், சில எளிய இயற்கை வழிமுறைகளைப் பற்றி தெரிந்துகொள்ளுங்கள். 🌱

🟣 👉 இந்த Reel-ஐ முழுமையாக பாருங்கள்

🟣 👉 உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Save செய்து வைத்துக்கொள்ளுங்கள்

🟣 👉 தேவையானவர்களுக்கு Share செய்யுங்கள் ❤️

நன்றி 💐q

01/10/2026

🟣🟣🟣🔵🔵🔵🟣🟣🟣
=================
*வயிற்றில் வாயு, உப்புசம், செரிமானத் தொந்தரவு போன்றவை அடிக்கடி இருக்கிறதா? 🌿*
==============
👇👇👇
*Please Follow my insta page*

https://www.instagram.com/reel/Dd87h-rOQAq/?stkn=YjZqOWsybmpxczFh
==============
நம் பாரம்பரிய உணவு முறைகளில் இருக்கும் சில எளிய வழிகளைப் பற்றி தெரிந்துகொள்ள இந்த Reel-ஐ முழுமையாக பாருங்கள். 👀✨

📌 Save செய்து வைத்துக்கொள்ளுங்கள்
📲 நண்பர்கள் & குடும்பத்தினருக்கு Share செய்யுங்கள்
❤️ மேலும் பயனுள்ள ஆரோக்கிய தகவல்களுக்கு Follow செய்யுங்கள்!

நன்றி 🙏💐

01/10/2026

🟠🟠🟠🟠🟤🟤🟤🟤
*வெரிகோஸ் நரம்பு முடிச்சி நோய் என்றால் என்ன?*
==============
*தினமும் ஒரு ஆரோகிய தகவல் பெற ஆயுசு 120 குழுவில் இணையவும்*
👇👇👇
https://chat.whatsapp.com/Lb1IHWHR4BA10Z4rS7FC7w
==============
பலருக்கு கால் தொடைக்கு கீழ்ப் பகுதியிலோ, முட்டிக்காலுக்கு பின்புறத்திலோ, நரம்புகள் முடிச்சிட்டுக் கொண்டதைப் போல இருப்பதைப் பார்த்திருப்பீர்கள்.

முட்டிக்கால் களுக்கு கீழேயும் இத்தகைய நரம்பு முடிச்சுகள் இருக்கும். உடலின் மற்ற பாகங்களிலும் கூட இத்தகைய முடிச்சுகள் இருக்கும். இவற்றால் அவ்வப்போது கால் பகுதியில் வலியும், வேதனையும், குடைச்சல் போன்ற உணர்வும் ஏற்படும்.

கால் பகுதியின் இரத்த ஓட்டம் கடுமையாக பாதிக்கும். கால்கள் செயல் இழப்பது, வீங்குவது போன்ற பல தொல்லைகள் ஏற்படக்கூடும். நாள்பட்ட நோயின் தாக்கத்தால் புண்கள் ஏற்படவும் வாய்ப்புண்டு.

அட இதுதான் வெரிகோஸ் வெயின் நோயா?

இது நிறைய பேருக்கு இருப்பதை நாம் பார்த்திருக்கிறோமோ என்று நினைக்கத் தோன்றுகிறதா? உண்மைதான். இது பரவலாக பலருக்கும் உள்ள நோய்தான். கடுமையான வலியோ, வேதனையோ இல்லாததால் இதனை யாரும் பெரிதுபடுத்துவது இல்லை.

ஆனாலும், இது அலட்சியப்படுத்தக்கூடிய நோய் அல்ல.
நோய்களில் எதுவுமே அலட்சியத்துக்குரி யது அல்ல என்பதுதான் உண்மை. தலைவலி கூட தலை போகும் பிரச்சினையாக மாறலாம். நோய் என்றால் நோய்தான். அவற்றால் ஏற்படும் விளைவுகளிலும், வேதனைகளிலும் வேண்டுமானால் வேறுபாடு இருக்கலாம். எப்படி இருந்தாலும், எந்த நோயாக இருந் தாலும் அதனைக் குணப்படுத்த முயல வேண்டும் என்பதே மருத்துவத்தின் அடிப்படைக்கோட்பாடாகும்.

அது ஒருபுறம் இருக்கட்டும்.

இப்போது வெரிகோஸ் வெயின் நோய் குறித்தும், அதற்கான சிகிச்சைகள் பற்றியும் தெரிந்து கொள்வோம்.

கை, கால்கள் உட்பட உடலின் அனைத்து பாகங்களில் இருந்தும் இதயத்துக்கு அசுத்த இரத்தத்தை எடுத்துச் செல்லும் இரத்தக் குழாய் களுக்கு வெயின் என்றுபெயர்.

வெரிகோஸ் என்றால் இரத்த நாளங்கள் புடைத்துப்போதல் அல்லது வீங்குதல் என்று பொருள். இதயத்திற்கு அசுத்த இரத்தத்தை எடுத்துச் செல்லும் நாளங்கள் சுருண்டுகொள்ளுதல், வீங்குதல் போன்ற நோய்களே, வெரிகோஸ் வெயின் என்று அழைக்கிறோம்.

வெரிகோஸ் வெயின் நோய் எதனால் வருகிறது ?

மனிதனின் பெருங்குடல், விலங்குகளுக்கு இருப்பதைப் போல் கீழ்நோக்கித் தொங்கிய படி இல்லை. ஒரு கூட்டுக்குள் இருப்பதைப் போல மனிதனின் பெருங்குடல் அடைக்கப் பட்டுள்ளது.

மலச்சிக்கல் ஏற்படும் போது, இரத்தநாளங்கள் அனைத்தும் அழுத்தப்படு கின்றன. நாளங்கள் புடைத்தல் அல்லது வீங்குதல் போன்ற இயல்புக்கு மாறான நிலைக்கு தள்ளப்படுகின்றன.

ஆக, மலச்சிக்கல் தான் இந்த நோய்க்கான மூல காரணமாக கருதப் படுகிறது. அடுத்தபடியாக ஒரே இடத்தில் நீண்ட நேரம் அசைவற்று நின்றபடியே வேலை செய்வது, ஒரே இடத்தில் கால்களை தொங்க விட்ட படியே அசைவற்று உட்கார்ந்திருப்பது போன்றவற்றாலும் இரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு இந்நோய் வருவதற் கான காரணமாகும்.

இரத்த நாளங்களில் உள்ள வால்வுகள் பலவீனமாக இருந்தால் இந்த நோய் ஏற்படு வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

பாதங்களில் இருந்து இரத்தத்தை இதயத்திற்கு எடுத்துச் செல்லும் போது, புவியீர்ப்பு விசைக்கு எதிராக, அதிகவிசையுடன் வால்வு கள் இயங்க வேண்டி உள்ளது.

அது இயலாமல் போகும் போது, இரத்தம் மீண்டும் கீழ்நோக் கியே செல்லத் தொடங்கும். இதனால், இரத்த நாளங்களின் சுவர்கள் பாதிக்கப்பட்டு, புடைத் தும் வீங்கியும் காணப்படும்.

ஆக, இவை எல்லாமே, உடலுக்கு அதிக அசைவில்லாத வாழ்க்கை முறையினால் வரும்கேடுகள் என்பது புரிகிறது. உடலுக்கு குறைந்தபட்ச உழைப்பும், அசைவும் தேவை என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

வெரிகோஸ் வெயின் நோய் யாருக்கெல்லாம் வர வாய்ப்பு அதிகம்?

அதிக எடை, மலச்சிக்கல், கருவுற்றிருக்கும் காலத்தில் போதிய பராமரிப்பின்மை, அசை வற்றிருத்தல் போன்ற காரணங்களால் பெண் களுக்கு வரவாய்ப்பு அதிகம். பரம்பரையில் யாருக்கேனும் இருந்தாலும் இந்நோய் இரு பாலருக்கும் வரும்.

வயது முதிர்ந்தவர்களுக்கு இரத்த ஓட்ட பாதிப்பினால் வர வாய்ப்புண்டு. கருவுற்றிருக்கும் பெண்களுக்கு கால் பகுதிகளில் உள்ள இரத்த நாளங்களில் இரத்த அழுத்தம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால், பெரும்பாலான தாய்மார்களுக்கு 3 மாதங்கள் முதல் 12 மாதங்களுக்குள் இந்த நோய் வருகிறது.

அதிக எடை உள்ளவர்கள், மற்றும் கொழுப்பு உள்ளவர்களுக்கும் இந்த நோய் எளிதில் வரும். பொதுவாக பிள்ளைப்பேறு, மெனோபாஸ், குடும்ப கட்டுப்பாட்டுக்கான அறுவைசிகிச்சை போன்ற காரணங்களால், ஆண்களைவிட பெண்களுக்கே இந்நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.

அதிக நேரம் ஒரே இடத்தில் நின்று கொண்டே வேலை செய்வது, அசைவற்று ஒரே இடத்தில்அமர்ந்திருப்பது போன்ற வாழ்க்கை முறை உள்ளவர்களுக்கு வெரிகோஸ் வெயின் நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

வெரிகோஸ் வெயின் நோய்க்கான அறிகுறிகள் என்ன?

தோலின் உட்புறத்தில் இரத்த நாளங்கள் நீண்டு தடித்திருப்பதைக் காண முடியும். கணுக்காலிலும், பாதங்களிலும் லேசான வீக்கம் காணப்படுதல். பாதங்கள் கனத்தும் வலியுடன் காணப்படு தல். பாதப்பகுதிகளில் சுளுக்கு மற்றும் சுண்டி இழுத்தல்.

கணுக்காலிலும், பாதங்களிலும் அரிப்பெடுத்தல் (இதனை சில சமயங்களில் உலர்ந்த சருமத்தின் காரணமாக ஏற்படும் நோயாக மருத்துவர்கள் தவறாக கருதிவிடுவது உண்டு)
வெரிகோஸ் வெயின் இருக்கும் இடத்தில் தோலின் நிறம் வேறுபட்டு காணப்படுதல்.

வருமுன் தடுக்க ?

இந்த நோயை வரும் முன் மட்டுமே தடுக்க முடியும். வந்துவிட்டால் அதனை அவ்வளவு எளிதில் அகற்ற முடியாது. மேலும் அதிகரிக் காமல் பார்த்துக்கொள்ளலாம்.
எடை அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
அதிக நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருப் பதையோ,
நின்றுகொண்டு இருப்பதையோ தவிர்க்க வேண்டும்.
எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டே இருப்பது நல்லது.
தொடைகளை இறுக்கும் ஆடைகளை அணியக் கூடாது.
தளர்ந்த ஆடைகளையே அணிய வேண்டும்.
எடை அதிகம் உள்ளவர்கள் கட்டாயம் அதனைக் குறைக்க முயற்சிக்க வேண்டும்.
எடை அதிகம் உள்ள பெண்கள் குதிகால் உயர்ந்த செருப்பு அணிவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

சிகிச்சை வாழ்க்கை முறையை மாற்றச் செய்வதில் இருந்துதான் இந்த நோய்க்கான சிகிச்சையைத் தொடங்க வேண்டும். இதன் மூலம் வெரி கோஸ் வெயின் புதிதாக உருவாவதைத் தடுப்பதுடன், ஏற்கனவே இருப்பவற்றால் வரும் வலி மற்றும் வேதனைகளைக் குறைக்க முடியும்.

அறுவை சிகிச்சைகளாலோ, மற்ற விதிமுறைகள் மூலம் அகற்றுவதாலோ முழுமையாக பயன் கிடைக்காது. ஏனென்றால், மற்றொரு இரத்த நாளத்தின் மூலமாக இந்நோய் ஏற்பட வாய்ப்புண்டு.

வெரிகோஸ் வெயின் நோய் வந்தபின்னர் அதனை அகற்றுவது கடினம் என்பதையும், வரும்முன் காப்பதற்கு முயல வேண்டும் என்பதுமே முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டிய அம்சங்கள்.

ஆயுர்வேதத்தில் இந்நோயின் தன்மைக்கு ஏற்ப உள் மருந்துகள் உட்கொள்வதாலும், தைலங்கள் கொண்டு நீவி விடுவதாலும் மற்றும் முறையான பஞ்சகர்மா சிகிச்சையும் மிகுந்த பலனை அளிக்கின்றன.

நமது பாரம்பரிய சித்த மருத்துவத்தில் இந்த நரம்பு முடிச்சு நோயை குணப்படுத்த பல முறைகள் உள்ளது...

நல்ல அனுபவம் மிக்க சித்த மருத்துவரை அணுகி இந்த நோயை எளிதில் குணப்படுத்தலாம்...

28/09/2026

Kelapa natural
Pure • Natural • Healthy 💚
web: https://kelapanatural.com/
contact: +91 9092957654

Get your favorite Natural & Organic Products delivered straight to your doorstep! 🏡✨

🚚 FREE Door Delivery Across Tamil Nadu
🛒 Healthy Choices | 🌱 Natural Products

Choose Nature… Welcome Health! 💚

Shop quality Organic & Natural Products from the comfort of your home! 🌿
📦 FREE Door Delivery Across Tamil Nadu
🛍️ Wide range of natural products
🌱 Pure • Natural • Healthy
🏠 Delivered right to your doorstep

👉 Save this Reel
📲 Share with your loved ones
💚 Follow for more natural food & wellness updates!

21/09/2026

🔵 🔵 🔵 🔵 🔵 🔵 🔵
வாய்ப்புண் தொல்லையா?
வீட்டிலேயே இயற்கை தீர்வு இருக்கிறது!
================
👇👇👇
தினமும் ஒரு இயற்கை மருத்துவ தகவல் பெற – ஆயுசு 120 குழுவில் இணையுங்கள்:
https://chat.whatsapp.com/EFvL7f6sM11EvELmOh8mob?s=cl&p=a...
🔵🟢 நெல்லி இலைகளை அவித்த நீரீனால் அடிக்கடி வாய் கொப்பளித்துவர வாய்ப்புண்கள் ஆறிவிடும்.
நெல்லிச் சாறையும், தேனையும் சமமாகக் கலந்து, மூச்சுத் திணறல், நீண்ட கால விக்கல் நோய் முதலியவற்றிற்குக் கொடுத்து வரலாம்.
சில மருத்துவர்ள் இதோடு திப்பிலி சூரணத்தையும் சேர்த்துக் கொடுப்பார்கள்.
வாய்ப்புண் போக, மணத்தக்காளி இலைகளை நிறைவாய் போட்டு மென்று, சற்று நேரம் வாயில் வைத்திருந்து விழுங்கவும். இவ்வாறு முற்றின தேங்காயையும் உபயோகிக்கலாம்.
வாயில் வயிற்றில் புண் இருந்தால் பாலில் சிறிது தேனைக் கலந்து சாப்பிட்டுவர சில நாட்களில் புண் குணமாகும்.
🔵🟢 வாய்ப்புண் அதிகமாகி விட்டால் காரத்தை அடியோடு நிறுத்த வேண்டும். மாசிக் காயை உடைத்து அதன் தோலை மாத்திரம் வாயில் போட்டு அப்படியே அடக்கிக் கொள்ளுங்கள்.
ஊறிவரும் நீரை விழுங்குங்கள். வாய்ப்புண் சரியாகிவிடும்.
வாயில் புண் இருந்தால், அகத்திக்கீரையைச் சமைத்துப் சாப்பிடவும். வாய்ப்புண்ணும் நாக்குப் புண்ணும் குணமாகும். புண் அதிகமாக இருந்தால், புண் மீது பசு வெண்ணையைத் தடவுங்கள். குழந்தைகளுக்கு வாய்ப்புண் வந்தால், மாசிக்காயை பாலில் கரைத்து தேனில் குழைத்து நாக்கில் தடவ குணமாகும்.
தீராத வாய்ப்புண்ணிற்கு கடுக்காயை உடைத்து ஒரு துண்டை வாயில் அடக்கி வைத்திருக்கவும்.
🔵🟢 சாறு தொண்டையில் போகப்போக உடனடியாக குணம் கிடைக்கும். பச்சரிசி, பயத்தம்பருபபு 1 ஸ்பூன் வெந்தயம், முழு பூண்டு 1 உரித்துப்போட்டு குக்காரில் வைத்து வெந்தவுடன், அத்துடன் கெட்டியான தேங்காய்ப்பால் கலந்து சாப்பிட்டால் வயிற்றுப்புண் ஆறி வாய்ப்புண்ணும் நீங்கும்.
🔵🟢 மணத்தக்காளிக் கீரையையும், அகத்திக் கீரையையும் பொரியலாகச் செய்து, தேங்காய்ப் பருப்பு சேர்த்து சாப்பிட்டால், வாய்புண் இரண்டே நாட்களில் குணமாகும்

18/09/2026

🟢 🟢 🟢 🟢 🟢 🟢 🟢
*மறந்து போன நம் முன்னோர்களின் பாரம்பரிய சித்த மருத்துவ ரகசியங்கள்!*

சில எளிமையான சித்த மருத்துவக் குறிப்புகளைப் பற்றி பார்க்கலாம்.
👇👇👇
*தினமும் ஒரு இயற்கை மருத்துவ தகவல் பெற – ஆயுசு 120 குழுவில் இணையுங்கள்:*
https://chat.whatsapp.com/EFvL7f6sM11EvELmOh8mob?s=cl&p=a&mlu=4&ilr=4
=================

🟣🟢 ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம் ஆகிய மூன்றையும் கொதிக்க வைத்து; ஆறவைத்து வடிகட்டி குடித்தால், அஜீரணம் சரியாகும்.

🟣🟢 வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். அத்துடன் ஆறாத வயிற்றுப்புண்ணும் நீங்கும்.

🟣🟢 செம்பருத்தி இலைகளை பொடியாக்கி, தினமும் இருவேளை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் தீரும்.

🟣🟢 கற்பூரம், சுக்கு, சாம்பிராணி, பெருங்காயம் இவைகளை சம அளவு எடுத்து சேர்த்து வடித்த கஞ்சியில் கலக்கி மறுபடியும் சூடுபடுத்தி, மூச்சுப்பிடிப்பு உள்ள இடத்தில் மூன்று வேளை தடவினால் குணமாகும்.

🟣🟢 கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வந்தால் சரும நோய் குணமாகும்.

🟣🟢 வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்து குளித்து வந்தால் தேமல் குணமாகும்.

🟣🟢 ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வந்தால் மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.

🟣🟢 நாட்டுமருந்து கடைகளில் கிடைக்கும் வசம்பு பொடியை சிறிதளவு தேனில் குழைத்து குழந்தைகளுக்கு தர காய்ச்சல் குணமாகும்.

🟣🟢 நரம்பு தளர்ச்சி உள்ளவர்கள் காலை மாலை வேளைகளில் சிறிதளவு வசம்பு பொடியுடன் பனங்கற்கண்டு சேர்த்து வென்னீரில் கலந்து சாப்பிட்டுவர நரம்பு தளர்ச்சி கை, கால் நடுக்கம் குணமாகும்.

🟣🟢 ஆடாதொடை பொடி, நிலவேம்பு பொடி, விஷ்ணுகரந்தை பொடி, இவைகளுடன் கிருந்தை நாயகம் இலை, குப்பைமேனி இலை சேர்த்து தண்ணீரில் கொதிக்க வைத்து கஷாயம் செய்து காலை மாலை குடித்துவர எப்பேர்பட்ட காய்ச்சலும் 3 நாட்களில் சரியாகி விடும். மேலும் உடல்வலியும் தீரும்.

🟣🟢 சர்பகந்தா பொடியை சிறிதளவு காலை, மாலை தேன் அல்லது பாலில் கலந்து சாப்பிட்டு வர இரத்த அழுத்தம் நீங்கி, இரவில் தூக்கம் நன்றாக வரும். மன சோர்வு நீங்கும்.

🟣🟢 பீட்ரூட் சாறுடன் வெள்ளரி சாறு கலந்து சாப்பிட்டு வர சிறுநீரகங்களும், பித்தப்பையும் சுத்திகரிக்கப்படும்.
பீட்ரூட்டை சிறு துண்டுகளாக நறுக்கி எலும்பிச்சை சாற்றில் ஊற வைத்து உண்டுவர இரத்தத்தில் சிவப்பு அணுக்கள் உற்பத்தியாகும்.

🟣🟢 பீட்ரூட்டில் நைட்ரேட்டுகள் அதிகமாக உள்ளது. பீட்ரூட்டை சாப்பிடும் போது நைட்ரேட்டுகள் நமது உடலில் உள்ள பார்டீரியாக்களால் நைட்ரைட்டுகளாக மாற்றப்பட்டு இரத்த நாளங்களை விரிவடய செய்து, உடல் முழுவதும் இரத்த ஓட்டத்தை மேன்படுத்தும். மேலும் ஆண்மை சக்தியை அதிகரித்து பாலுறவில் ஆர்வத்தை ஏற்படுத்துகிறது.

🟣🟢 அதிமதுரம், விதை நீக்கிய கடுக்காய் தோல், திப்பிலி, மிளகு இவற்றை வறுத்து பொடித்து, தினசரி காலை மாலை நெய்யுடன் கலந்து சாப்பிட கண் எரிச்சல் நீங்கி கண் ஒளி பெரும்.
🙏🙏💐💐
, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

17/09/2026

🔴 🔴 🔴 🔴 🔴 🔴 🔴
உடல் எடை குறைக்க… இந்த உணவுகள் போதும் !
உடலில் கெட்ட கொழுப்புக்கள் தங்காமல் உடல் பருமனை குறைக்க இயற்கை உணவுகள் !
================
👇👇👇
தினமும் ஒரு இயற்கை மருத்துவ தகவல் பெற – ஆயுசு 120 குழுவில் இணையுங்கள்:
https://chat.whatsapp.com/Bkqss9L9jm1A8ZgglGieXf
🔴🟠 காலையில் டீ, காபி குடிப்பதைத் தவிர்த்து, சுடு தண்ணீரில் எலுமிச்சைச் சாறு மற்றும் தேன் கலந்து குடிக்கலாம்.
🔴🟠 பூசணிக்காய், வாழைத்தண்டு இவற்றுக்கெல்லாம் கெட்ட நீரை வெளியேற்றும் தன்மை அதிகம். எனவே, ஒரு நாள் வாழைத் தண்டு சாறு, மறுநாள் பூசணிக்காய் சாறு என்று மாற்றி மாற்றி வெறும் வயிற்றில் அருந்தலாம்.
🔴🟠 நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்களைச் சாப்பிடலாம்.
🔴🟠 எண்ணெயில் பொரித்த உணவுகளை அறவே தவிர்க்கலாம். வேக வைத்த உணவுகளைச் சாப்பிடுவது நல்லது. நார்ச்சத்து நிறைந்த காய்கறிகளை அதிக அளவு சேர்த்துக் கொள்ளலாம்.
🔴🟠 அதிக கலோரி உள்ள உணவுப் பொருட்களைத் தொடவே வேண்டாம். நொறுக்குத் தீனி ஆசையைத் தடுக்க முடியாவிட்டால்... அவல், அரிசிப்பொரி, காய்கறி சாலட் சாப்பிடலாம்.
🔴🟠 சாப்பிட்டு முடித்தவுடன் 10 நிமிடங்கள் கழித்து சுடுதண்ணீர் அருந்தலாம்.
🔴🟠 தினமும் உணவில் 2 டீஸ்பூன் 'கொள்ளு’ சேர்ப்பது, உடலில் அதிக கொழுப்பு சேர விடாமல் தடுக்கும்.
🔴🟠 டி.வி பார்த்துக் கொண்டே சாப்பிடுவது கூடாது. இதனால், சாப்பாட்டின் அளவு தெரியாமல் போய்விடும்.
🔴🟠 தினமும் ஒரு சிறிய வெங்காயத்தைப் பச்சையாக சாப்பிடுவது, ரத்தத்தில் தங்கியிருக்கும் கொழுப்பை சரிசெய்துவிடும்
🙏🙏💐💐
, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

16/09/2026

🔵 🔵 🔵 🔵 🔵 🔵 🔵
*அவசர நேரத்தில் உதவும்.. 22 எளிய வீட்டு வைத்திய குறிப்புகள்!*
👇👇👇
தினமும் ஒரு இயற்கை மருத்துவ தகவல் பெற – ஆயுசு 120 குழுவில் இணையுங்கள்:
https://chat.whatsapp.com/Bkqss9L9jm1A8ZgglGieXf
===============
🟠🟣 1. நெஞ்சு சளி
தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.
🟠🟣 2. தலைவலி
ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.
🟠🟣 3. தொண்டை கரகரப்பு
சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.
🟠🟣 4. தொடர் விக்கல்
நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.
🟠🟣 5. அஜீரணம்
ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.
அல்லது கறிவேப்பிலை,சுக்கு,சீரகம்,ஒமம் சேர்த்து துவையல் அரைத்து சாப்பிட்டால் அஜுரணம் சரியாகும். அல்லது வெற்றிலை,4 மிளகு இவற்றை மென்று தின்றால் அஜுரணக்கோளாறு சரியாகும்.
சீரகத்தை நீரிலிட்டு கொதிக்க வைத்து,அந்த சீரக நீரைக் குடித்து வர நன்கு ஜுரணமாவதோடு,உடல் குளிர்ச்சியடையும்.அல்லது 1தேக்கரண்டி இஞ்சிச் சாறுடன்,சிறிது தேன் கலந்து பருகினால் ஜீரணசக்தி அதிகரிக்கும்.
🟠🟣 6. வாயு தொல்லை
வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.
🟠🟣 7. வயிற்று வலி
வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.
🟠🟣 8. சரும நோய்
கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய் குணமாகும்.
🟠🟣 9. மூக்கடைப்பு
ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.
🟠🟣 10. கண் எரிச்சல், உடல் சூடு
வெந்தயத்தை மட்டும் ஊற வைத்து நன்கு அரைத்து தலையின் முடி வேர்க் கால்களில் தடவி வைத்து நன்கு ஊறியபின் தலைமுடியை அலசினால் முடி நன்கு வளருவதுடன் கண் எரிச்சல், உடல் சூடு தணியும்.
🟠🟣 11. வயிற்றுக் கடுப்பு
வயிற்றுக் கடுப்பு ஏற்பட்டால் புழுங்கல் அரிசி வடித்த தண்ணீரில் சிறிதளவு உப்பையும், வெண்ணெயையும் கலந்து குடித்துவிடுங்கள். சிறிது நேரத்திலேயே குணம் தெரியும்.
🟠🟣 12. பற் கூச்சம்
புதினா விதையை வாயில் போட்டு மென்றுக்கொண்டிருந்தால் பல்லில் ஏற்படும் கூச்சம் மறையும். அல்லது புதினா இலையை நிழலில் காய வைத்து தூள் உப்பு சேர்த்து பல் துலக்கினால் ஒரிரு நாளில் குணமாகும்.
🟠🟣 13. வாய்ப் புண்
வாய்ப் புண்ணுக்கு கொப்பரைத் தேங்காயை கசகசாவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் குணமாகும். அல்லது கடுக்காயை வாயில் ஒதுக்கி வைத்தால் வாய்ப்புண் ஆறும்.
🟠🟣 14. தலைவலி
பச்சை கொத்துமல்லித் தழைகளை மிக்ஸில் அரைத்து தினமும் காலையில் எழுந்தவுடன் குடித்துவர தலைவலி நீங்கும்.
🟠🟣 15. வயிற்றுப் பொருமல்
வசம்பை எடுத்துச் சுட்டுக் கரியாக்கி அதனுடன நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் ஆகிய மூன்றையும் கலந்து அடிவயிற்றில் பூசினால் வயிற்றுப் பொருமல் நீங்கும்.
🟠🟣 16. அஜீரணம்
ஒரு கப் சாதம் வடித்த நீரில், கால் ஸ்பூன் மஞ்சள் பொடியைக் கலந்து குடிக்க வயிற்று உப்புசம், அஜீரணம் மாறும். அல்லது சிறிது சுக்குடன் கருப்பட்டி,4 மிளகு சேர்த்து நன்கு பொடித்து 2 வேளை சாப்பிட்டால் அஜுரணம் குணமாகி பசி ஏற்படும்.
ஒமம்,கருப்பட்டி இட்டு கசாயம் செய்து பருகினால் அஜுரணம் சரியாகும்.
🟠🟣 17. இடுப்புவலி
சாதம் வடித்த கஞ்சியை எடுத்து ஆறவைத்து ஒரு ஸ்பூன் நெய்யில் கொஞ்சம் சீரகம் கலந்து குடித்தால் இடுப்புவலி நீங்கும்.
🟠🟣 18. வியர்வை நாற்றம்
படிகாரத்தை குளிக்கும் நீரில் கலந்து குளித்தாலும் வியர்வை நாற்றம் மட்டுப்படும்.
🟠🟣 19. உடம்புவலி
சாம்பிராணி, மஞ்சள், சீனி போட்டு கஷாயமாக்கி பாலும் வெல்லமும் சேர்த்து பருகினால் உடம்புவலி தீரும்.
🟠🟣 20. ஆறாத புண்
விரலி மஞ்சளை சுட்டு பொடி செய்து தேங்காய் எண்ணெயில் குழப்பி காலையிலும் இரவிலும் ஆறாத புண்களுக்கு மேல் போட்டால் சீக்கிரம் குணமாகிவிடும்.
🟠🟣 21. கண் நோய்கள்
பசுவின் பால் நூறு மில்லி தண்ணீரில் அதே அளவு விட்டு இதில் வெண்தாமரை மலர்களைப் போட்டுக் காய்ச்சி பாத்திரத்தை இறக்கி வைத்து அதில் வரும் ஆவியைக் கண்வலி போன்ற நோய்கள் வந்த கண்ணில் படும்படி பிடித்தால், கண் நோய்கள் அகலும்.
🟠🟣 22. மலச்சிக்கல்
தினமும் குடிநீரைக் காய்ச்சும் போது ஒரு கைப்பிடி சுக்கைத் தட்டிப் போடலாம். தேவைப் பட்டால் குடிநீரை வடிகட்டிக் கொள்ளலாம். மருத்துவ குணங்களைக் கொண்ட இப்பொருள், ஜீரணத்துக்கு உதவும், வாயுவை அகற்றும், அல்லது இரவில் இரண்டு வாழைப்பழம் சாப்பிடலாம். அதிகாலையில் இலேசான சுடுநீரில் அரை டீஸ்பூன் கடுக்காய்ப் பொடி சேர்த்துக் குடித்து விட்டால் பதினைந்து நிமிடங்களில் குடல் சுத்தமாகி விடும்.
💐💐🙏🙏
, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

Category

Telephone

Address

Chennai

Opening Hours

Monday 9am - 8pm
Tuesday 9am - 8pm
Wednesday 9am - 8pm
Thursday 9am - 8pm
Friday 9am - 8pm
Saturday 9am - 8pm

Alerts

Be the first to know and let us send you an email when Kelapa Natural posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Subscribe

We will notify you when anything happens in Chennai.