Divisional Hospital Mavadivembu

Divisional Hospital Mavadivembu

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Divisional Hospital Mavadivembu, Health/Beauty, Batticaloa.

06/08/2026

*பொறுப்பு வைத்திய அதிகாரியினால்* *எமது வைத்தியசாலையில் நிலவும் தேவைப்பாடுகள் தொடர்பாக வைத்தியசாலை அபிவிருத்தி குழுவிடம் முன்வைத்த கோரிக்கையின் பிரகாரம் அபிவிருத்தி குழு தலைவர் Lion N. Pushpaharan MJF/MAF அவர்களினது முயற்சியின் பயனாக வைத்தியசாலையின் பாவனைக்காக Otoscope ஒன்றினை Mr M C Patterson
(Sole Proprietor
Patterson & Sons
Batticaloa )
மூலம் பெறப்பட்டு அபிவிருத்தி குழு தலைவர் Lion N. Pushpaharan MJF/MAF அவர்களால் பொறுப்பு வைத்திய அதிகாரியிடம் கையளிக்கப்பட்டது.

Photos from Divisional Hospital Mavadivembu's post 05/08/2026

எமது மாவடிவேம்பு பிரதேச வைத்தியசாலையின் அபிவிருத்திக் குழு உறுப்பினரான Lion S.Hemachandran அவர்களால் வைத்தியசாலையின்
பயன்பாட்டிற்காக 02 (TV Antenna) வழங்கி வைக்கப்பட்டன. அத்துடன்
எமது ​வைத்தியசாலையில் பிறக்கும் குழந்தைகளின் நலன்கருதி (Gift Voucher) திட்டத்திட்டத்திற்கான சிறப்பு பரிசுப் பொருட்களும் கையளிக்கப்பட்டன.
​தாயையும் சேயையும் கௌரவிக்கும் இந்த உயரிய திட்டத்திற்கும், வைத்தியசாலையின் வளர்ச்சிக்கும் தொடர்ந்து உறுதுணையாக இருந்துவரும் Lion .S.Hemachandran அவர்களுக்கு எமது மாவடிவேம்பு பிரதேச வைத்தியசாலை நிர்வாகத்தின் சார்பிலும், பொதுமக்களின் சார்பிலும் மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

05/08/2026

மாவடிவேம்பு பிரதேச வைத்தியசாலை நோயாளர் விடுதி அழகுபடுத்தும் வேலைத்திட்டத்திற்கு, எமது அபிவிருத்திப் பொதுக்குழு தலைவர் Lion N.Pusphaharan MJF/MAF அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க, Mr.F.Neil Nishanth அவர்கள் தனது குடும்பத்தினர் சகிதம் நோயாளர்களின் கட்டில்களுக்கான படுக்கைவிரிப்புகள் தலையணைகள் மற்றும் தலையணை உறைகளை அன்பளிப்பாக வழங்கியுள்ளனர்.
​இந்த மாபெரும் உதவிக்காக, வைத்தியசாலையின் சார்பாக Mr.F.Neil Nishanth அவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

Photos from Divisional Hospital Mavadivembu's post 04/08/2026

எமது வைத்தியசாலையில் குழந்தை பிரசவிக்கும் தாய்மார்களுக்கு பரிசுப் பொதிகளை வழங்கும் உயரிய சமூக நல நோக்கத்துடன், வைத்தியசாலை அபிவிருத்திக்குழு உறுப்பினரான திரு.லயன் A. வினோத் மற்றும் அவரது பாரியார் மூலமாக அன்பளிப்புப் பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன.
இவ்வன்பளிப்புப் பொருட்கள், வைத்திய அதிகாரியிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டு, எதிர்வரும் காலங்களில் பிரசவிக்கும் தாய்மார்களுக்கு வழங்குவதற்காக வைத்தியசாலையால் பொறுப்பேற்கப்பட்டன.
அவர்களது மனிதநேய சேவைக்கும், வைத்தியசாலையின் நலனில் தொடர்ந்து வழங்கிவரும் ஆதரவு மற்றும் பங்களிப்பிற்கும் எமது மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

08/07/2026

வணக்கம், நமது மாவடிவேம்பு பிரதேச வைத்தியசாலை தொடர்பான குறை நிறைகளை எமக்கு message மூலம் தெரியப்படுத்தலாம், குறைகளை உடனடியாக சரிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

வைத்திய பொறுப்பதிகாரி,
மாவடிவேம்பு பிரதேச வைத்தியசாலை.

Photos from Divisional Hospital Mavadivembu's post 08/07/2026

*வாரம்தோறும் இடம்பெறும் யோகா* பயிற்சியானது செவ்வாய்கிழமை வைத்தியசாலைக்கு வருகை தந்த பயனாளர்களுக்கு மருத்துவ மாதுவினால் வழங்கப்பட்டது.
Regional Director of Health Services, Batticaloa

26/06/2026

*​மாவடிவேம்பு பிரதேச வைத்தியசாலையில் இன்றைய தினமும் ஒரு மகிழ்ச்சியான தருணம்* ! தாயொருவருக்கு குழந்தை பிரசவிப்பு நிகழ்வு நிகழ்ந்ததையொட்டி எமது வைத்தியசாலையின் அபிவிருத்தி குழு உறுப்பினரான *Lion A.Vinoth* அவர்கள் தனது சார்பாக வழங்கப்பட்ட பரிசுப் பொதியை எமது வைத்தியரினால் அந்த தாய்க்கும் குழந்தைக்கும் வழங்கி கெளரவிக்கப்பட்டது. இந்த இனிய தருணத்தில், தாயும் குழந்தையும் நலமுடன் இருக்க பிரார்த்திக்கிறோம்.
Regional Director of Health Services, Batticaloa

Photos from Divisional Hospital Mavadivembu's post 17/06/2026

நேற்றைய தினம் உயர் குருதியமுக்கம் தொடர்பான விழிப்புணர்வு எமது வைத்தியசாலைக்கு வருகை தந்த பயனாளர்களுக்கு பயிற்சி தாதியர்களினால் வழங்கப்பட்டது.
Regional Director of Health Services, Batticaloa

15/06/2026

*புது வரவின் மகிழ்ச்சி* எமது வைத்தியசாலையில் தாய் ஒருவருக்கு சுகப்பிரசவம் நிகழ்ந்துள்ளது. இந்த நெகிழ்ச்சியான தருணத்தில், எமது வைத்தியசாலையின் அபிவிருத்தி குழு உறுப்பினரான *Lion A.Vinoth* அவர்களால் வழங்கப்பட்ட பரிசுப்பொதியானது பொறுப்பு வைத்தியரினால் அந்த தாய்க்கும் குழந்தைக்கும் வழங்கி கௌரவிக்கப்பட்டது. தாயும் பிள்ளையும் நலமுடன் வாழ வாழ்த்துகிறோம்!"
Regional Director of Health Services, Batticaloa

Category

Website

Address

Batticaloa

Alerts

Be the first to know and let us send you an email when Divisional Hospital Mavadivembu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Subscribe

We will notify you when anything happens in Batticaloa.