SanthiGanesh Talks

SanthiGanesh Talks

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from SanthiGanesh Talks, Health/Beauty, kodambakkam, Chennai.

’வின்’ தொலைக்காட்சி, ’குமுதம் சிநேகிதி’, விகடன் என, 21 வருட பத்திரிகையாளர் பயணம். உணவு, ஆரோக்கியம், உறவுகள், குழந்தை வளர்ப்பு... என வாழ்க்கைக்கு தேவையான, இயல்பான வழிகாட்டல்கள் இந்த பக்கத்தில் இடம்பெறவிருக்கிறது.

23/09/2026

மகள் யானையை, தாய் யானை தலைவியாக்குமா? - எழுத்தாளர் கோவை சதாசிவம்

21/09/2026

போர்க்களத்தில் யானைகள் சந்தித்த துன்பங்கள் - எழுத்தாளர் கோவை சதாசிவம்

16/09/2026

மானுக்கு மாங்காய் தரும் குரங்கு! மயிலுக்கு பூச்சி தரும் மான் - Writer Kovai Sathasivam |

15/09/2026

பேய், பிசாசை விரட்டுமா முள்ளெலிகள்? - கோவை சதாசிவம்

14/09/2026

பாம்புகளை சாப்பிடும் எலிகள் - கோவை சதாசிவம்

13/09/2026

ஷாதிகாவின் Silver Medal Effect பிரச்னை -

13/09/2026

BIGG BOSS நடிகை ஷாதிகாவின் Silver Medal Effect பிரச்னை

நடிகர் ராகவ் கிட்ட நடிகை ஷாதிகா கண்ணீரோட பேசுற ஒரு வீடியோ வைரல் ஆகிட்டே இருக்கு.

’’இது என்னோட கடைசி சான்ஸ். சினிமாவுல ஹீரோயினா ஜெயிக்க இந்த பிக்பாஸ் தான் எனக்கு கிடைச்ச கடைசி வாய்ப்பு. என்ன அடிங்க. மிதிங்க. ஆனா, நான் கடைசி வரைக்கும் போராடுவேன். ஒருவேளை ஹீரோயின் வாய்ப்பு கிடைக்கலைன்னாலும், கடைசி வரைக்கும் போராடின திருப்தியாவது எனக்கு கிடைக்கும்.

சினிமாவுல ஹீரோயின் ஆகுறதுக்கு குறிப்பிட்ட வயசு இருக்கு. அதுக்குள்ள நடிக்கணும், என் லைஃப்லயும் நான் செட்டில் ஆகணும். ஸோ, என் கையில இருக்கிறது ரொம்ப குறைச்சலான காலம் தான்.

இங்க பிக்பாஸ்க்குள்ள கூட நான் நம்பர் டூ-வா தான் உள்ள வந்தேன். ரொம்ப வருஷமா நான் சினிமாவுலேயும், சீரியல்லேயும் நம்பர் டூ ஆகவே இருந்துக்கிட்டு இருக்கேன். பிக் பாஸ்க்குள்ள வந்த பிறகு அது மாறும்னு நினைச்சேன். ஆனா, இங்க உள்ள வந்தப்போவும் நான் நம்பர் டூ-வா தான் வந்தேன். நான் 19-வது நபரா வந்திருந்தா கூட எனக்கு அந்த வலி தெரிஞ்சு இருக்காது. ஆனா, நான் பிக்பாஸ்க்குள்ளேயும் இரண்டாவது ஆளா வந்தது எனக்கு ரொம்ப வலிச்சது’’ன்னு சொல்லி அந்த வீடியோவுல அழுதிருப்பாங்க.

ஷாதிகாவோட அழுகைக்கு உளவியல்ல சில்வர் மெடல் எஃபெக்ட்னு பெயர். இத கொஞ்சம் விளக்கமா சொல்லணும்னா ஒலிம்பிக்கில் இரண்டாவது இடம் அதாவது சில்வர் மெடல் வாங்கினவங்க, ப்ரான்ஸ் மெடல் வாங்கினவங்கள விட டிப்ரஷனோட இருக்கிறதை உளவியல் நிபுணர்கள் குறிப்பிடுறாங்க அதுக்கு என்ன காரணம்னா, மூணாவதா வந்தவங்க கூட ஒரு மெடல் கிடைச்சதுங்குற திருப்திப்பட்டுப்பாங்க. ஆனா, இரண்டாவதா வந்தவங்க முதல் இடத்தை ஜஸ்ட் மிஸ் பண்ணிட்டோமே அப்படிங்கற டிப்ரஷனோட தான் இருப்பாங்களாம். அந்த சில்வர் மெடல் எஃபெக்ட்ல தான், ஷாதிகா நடிகர் ராகவ் கிட்ட அழுது இருக்காங்க.

13/09/2026

முனியம்மாவை பலரும் திட்டுவதன் உளவியல் காரணம்

காமன் மேன் பிக்பாஸ்க்குள்ள வந்தப்ப கிராமத்துப் பொண்ணு, வெள்ளந்திப் பொண்ணு, அப்பாவிப் பொண்ணு அப்படின்னு கொண்டாடிக்கிட்டு இருந்த சோசியல் மீடியா, இப்போ முனியம்மா அப்பாவி எல்லாம் கிடையாது. அப்பாவி மாதிரி நடிக்கிற விவரமான பொண்ணு. பிக்பாஸ்க்குள்ள சர்வைவ் பண்றதுக்கும், எல்லா ப்ரோமோலேயும் தன்னோட முகம் தெரியணும்கிறதுக்கும், பிக்பாஸ் வீட்டுல இருக்குற அத்தனை கேமராவும் தன்னை நோக்கி திரும்பணும் அப்படிங்கிறதுக்காகவும் விவரமா விளையாடிகிட்டு இருக்காங்க. இவங்க ஒண்ணும் வெள்ளந்தி கிடையாதுன்னு பேச ஆரம்பிச்சிட்டாங்க.

பிக்பாஸ் வீட்டுக்குள்ள வர்றவங்க மேல விமர்சனம் வருவது வழக்கமான விஷயம் தான். ஆனா, முனியம்மாவை நிறைய பேர் செஞ்சிக்கிட்டு இருக்கிறது உருவ கேலி.

பிக்பாஸ்க்குள்ள வர்றதுக்கு இந்த முகரைக்கு என்ன தகுதி இருக்கு, குரங்கு, தேவாங்கு, கருங்குரங்கு, மூஞ்சிய பாத்தாலே பிடிக்கல, பல்லைப் பாரு, வாயைப் பாருன்னு அவ்வளவும் மோசமான உருவ கேலிகள். இதுக்கு பின்னாடி முனியம்மாவோட கேம் யுக்தி இருந்தாலும், வேற ஓர் உளவியல் காரணமும் இருக்கு.

பொதுவா நாலு தெரு தள்ளி ஏழையாக இருந்த ஒருத்தன் உழைத்து பணக்காரன் ஆனதும், அத கொண்டாடுற மனித மனசு, அதுவே நம்ம பக்கத்து வீட்டுக்காரனோ அல்லது நெருங்கிய சொந்தக்காரனோ திடீர்னு பணக்காரனாகிட்டா, அத நம்மளோட ஆழ்மனசு கொண்டாடாது. ஏத்துக்காது. பொறாமையில எரிச்சல் தான் ஆகும். அவனைப்பத்தி தெரியாதா அப்படின்னு அவங்களோட உழைப்பை அதிர்ஷ்டம்னு சொல்லி அசிங்கப்படுத்திடும்.

இவ்வளவு ஏன், அப்படி திடீர்னு பணக்காரனான பக்கத்து வீட்டுக்காரனும் நெருங்கின சொந்தக்காரனும் ஜெயிக்கிறதுக்காக கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்கும்போது அவனுக்கு ஆதரவா நின்னவங்களே, அவன் ஜெயிச்சிட்டதுக்கு அப்புறம் அவள்/ன் எல்லாம் ஓர் ஆளான்னு உருவ கேலியும், கேரக்டர் அசாசினேஷனும் செய்ய ஆரம்பிச்சிடுவாங்க. மொத்தத்துல, மனிதர்களோட மனசுக்கு எல்லாரும் நமக்கு கீழே இருக்கணும்கிற ஒரு ரகசிய ஆசை இருக்கும். அந்த ஆசை சம்பந்தப்பட்டவங்களுக்கே கூட தெரியாது.

முனியம்மாவை ஆரம்பத்துல கொண்டாடினதுக்குக் காரணம், நம்மள மாதிரியே இருக்கிற ஒரு பொண்ணு தைரியமா பிக் பாஸ்க்குள்ள வர ஆசைப்படுது அப்படிங்கிறதுக்காக.
அதே முனியம்மா காமன் மேன்ல ஜெயிச்சு பிக் பாஸ் உள்ளே போயிட்டு, தனக்கு தெரிந்த யுக்தியில விளையாடிட்டு எல்லா ப்ரோமோலேயும் தன்னோட ப்ரசன்ஸ் இருக்குற மாதிரி பார்த்துக்கிறப்போ... ஒருவேளை முனியம்மா ஜெயிச்சிடுவாங்களோ அப்படிங்கிற எண்ணத்துல கூட இந்த மாதிரி உருவ கேலியா, கெட்ட வார்த்தைகளா சமூகத்துல வெளிப்படலாம்.

12/09/2026

முனியம்மாவை திட்றதுக்கு இதுதான் உண்மையான காரணம்

11/09/2026

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா
90 வது வயதில் காலமானார்

Category

Website

Address


Kodambakkam
Chennai
24

Alerts

Be the first to know and let us send you an email when SanthiGanesh Talks posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Subscribe

We will notify you when anything happens in Chennai.