Alumni GHSS BSR Health
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Alumni GHSS BSR Health, Health/Beauty, Bhavanisagar, Sathyamangalam.
19/09/2023
🌺முன்னாள் மாணவர்கள் நேரடி சந்திப்பு🌺
அனைவருக்கும் வணக்கம் 🙏🏻
நமது Alumini Ghss Bhavanisagar முகநூல் பக்க - பவானிசாகர் அரசு உயர்நிலை பள்ளி மற்றும் மேல்நிலை பள்ளி முன்னாள் மாணவர்கள் மற்றும் GHSS BSR 50 வாட்சாப் குழு - பவானிசாகர் அரசு உயர் நிலை பள்ளி மற்றும் மேல்நிலை பள்ளி முன்னாள் மாணவர்களின் முதலாம் நேரடி சந்திப்பு வருகின்ற 2024ம் ஆண்டு மே மாதம் 26ம் நாள் ஞாயிற்றுக்கிழமை - நமது பவானிசாகர் அரசு மேல்நிலை பள்ளியில் நடைபெற உள்ளது.
இந்த நேரடி சந்திப்பு நிகழ்ச்சி அன்றைய தினம் காலை சரியாக 09 மணிக்கு துவங்கி மாலை 06 மணிக்கு நிறைவு பெறும்.
இந்த வரலாற்று சிறப்பு மிக்க சந்திப்பில் கலந்துகொண்டு சிறப்பிக்க பவானிசாகர் அரசு மேல்நிலை பள்ளி முன்னாள் மாணவர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.
மேலும், இந்த சந்திப்பில் கலந்துகொள்ள விரும்பும் நண்பர்கள் தங்களது வருகையை உறுதி செய்யும் வகையில் - தங்களது பெயர், ஊர் மற்றும் தங்களின் வாட்சாப் எண்களை கமெண்ட் பாக்சில் பதிவிடும்படி கேட்டுக்கொள்கிறோம். நிகழ்ச்சி தொடர்பான முழுமையான விபரங்கள் நண்பர்களுக்கு வாட்சாப்பில் அனுப்பிவைக்கப்படும்.
நன்றி.
பவானிசாகர் அரசு மேல்நிலை பள்ளி முன்னாள் மாணவி திருமதி. லதாராவ் அவர்களின் நேர்காணல்.
*தலையில் வழுக்கை விழுவது ஏன்... குறிப்பாக ஆண்களுக்கு ஏன் அதிகமாக வழுக்கை விழுகிறது?*
குழந்தை முதல் பெரியவர்கள் வரைக்கும் இன்று தலைமுடிதான் ‘தலை’யாய பிரச்சினை. தலைமுடிப் பராமரிப்புக்காகக் காலம்காலமாக நாம் பின்பற்றி வந்த இயற்கை முறைகளைக் கைவிட்டு, செயற்கை அழகுசாதனப் பொருட்களைப் பயன்படுத்த ஆரம்பித்த பிறகு, தலைமுடியின் ஆயுள் குறைந்துவிட்டது. முன்பு 60 வயதுக்கு மேல் விழுந்த வழுக்கை, இப்போது 30 வயதிலேயே விழ ஆரம்பித்துவிடுகிறது.
*முடியின் வளர்ச்சி*
முடி என்பது ஒரு புரத இழை. கரோட்டின் எனும் புரதத்தால் ஆனது. ‘ஃபாலிக்கிள்’ (Follicle) எனும் முடிக்குழியில் இருந்து வளரக்கூடியது. நமது தலையில் சராசரியாக ஒரு லட்சம் முடிகள் இருக்கின்றன. தினமும் சராசரியாக 100 முடிகள் உதிர்வது இயற்கை.
முடி வளர்கிறது என்று சொன்னால், ஒரு செடி தொடர்ச்சியாக வளர்வதைப் போல் முடி வளர்கிறது என்று அர்த்தப்படுத்திக் கொள்ளக் கூடாது. முடியின் வளர்ச்சி 3 பருவங்களைக் கொண்டது. ‘அனாஜன்’ (Anagen) என்பது வளரும் பருவம்.
ஒரு முடியானது தினமும் சராசரியாக அரை மில்லிமீட்டர் நீளத்துக்கு வளர்கிறது. இந்த வளர்ச்சிப் பருவம் 3 முதல் 7 வருடங்கள் வரை நீடிக்கும். இதைத் தீர்மானிப்பது, பரம்பரையில் வரும் மரபணுக்கள். அடுத்தது ‘காட்டாஜன்’ (Catagen) என்று ஒரு பருவம்.
இதில் முடி இயற்கையாகவே உதிர ஆரம்பிக்கும். இந்தப் பருவம் 2 வாரங்களுக்கு நீடிக்கும். மூன்றாவது பருவம் ‘டீலாஜன்’ (Telogen). இது முடி ஓய்வெடுக்கும் பருவம். இது சுமார் 2 முதல் 4 மாதங்கள்வரை நீடிக்கும். இந்தச் சுழற்சி முடிந்து, மீண்டும் வளர்ச்சிப் பருவத்துக்குத் திரும்பும். முடி உதிர்ந்த இடத்தில் புதிதாக வேறு முடி முளைக்கும்.
தலைமுடி ஒவ்வொன்றும் ஒவ்வொரு பருவத்தில் இருக்கும். பெரும்பாலான முடிகள் வளரும் பருவத்தில் இருந்தால், முடி தொடர்ந்து வளரும். உதிரும் பருவத்தில் அதிக முடிகள் இருந்தால், முடி கொட்டும்; வழுக்கை விழும்.
*என்ன காரணம்?*
வயது, பரம்பரை, ஆன்ட்ரோஜன் ஹார்மோன்,,,, இந்த மூன்றும்தான் வழுக்கைக்கான முக்கியக் காரணங்கள். உடல் வளர்ச்சியின் நியதிப்படி, வயது ஆக ஆக செல்கள் தங்களைப் புதுப்பித்துக் கொள்வதைத் தாமதப்படுத்தும். இதன் விளைவால், புதிய செல்களின் உற்பத்தி குறையும். இது தலைமுடிக்கும் பொருந்தும். ஒரு கட்டத்தில் முடியின் வளர்ச்சியே நின்றுவிடும். முதுமையில் வழுக்கை விழுவது இப்படித்தான்.
வழுக்கை உள்ள பரம்பரையில் பிறந்தவர்களுக்கு அவர்களின் மரபணுக்களில் எந்த வயதில் வழுக்கை விழ வேண்டும் என்று ஏற்கனவே எழுதப்பட்டிருக்கும். அந்த வயதில் வழுக்கை விழுவது நிச்சயம். இதை மாற்ற முடியாது.
கடைசிக் காரணம் இது. டைஹைட்ரோ டெஸ்டோஸ்டீரோன் (Dihydro testosterone) என்பது ஒரு ஆன்ட்ரோஜன் ஹார்மோன். இது அளவாகச் சுரந்தால் முடி சரியாக வளரும்; அதிகமாகச் சுரந்தால் முடி கொட்டும். காரணம், இது முடிக்குழிகளைச் சுருக்கிவிடுகிறது. முடியின் வளர்ச்சிப் பருவத்தைக் குறைத்துவிடுகிறது. இதனால், வழுக்கை விழுகிறது.
சரி, ஆண்களுக்கு மட்டுமே வழுக்கை விழுகிறது. பெண்களுக்கு ஏன் வழுக்கை விழுவதில்லை? இந்தச் சந்தேகம் அதிகம் பேருக்கு இருக்கிறது. டெஸ்டோஸ்டீரோன் ஹார்மோன் பெண்களிடம் அளவாகவே சுரக்கிறது; அதீதமாகச் சுரக்க வழியில்லை. இதனால் பெண்களுக்கு வழுக்கை விழுவது மிக அரிதாக இருக்கிறது.
*வழுக்கையைத் தடுக்க முடியுமா?*
நமக்கு வயதாவதை எப்படித் தடுக்க முடியாதோ, அப்படித்தான் வழுக்கையும். இது பெரும்பாலும் பரம்பரை காரணமாகவே வருகிறது. எனவே, இதைத் தடுக்க முடியாது. ஆனால், சீக்கிரத்தில் வழுக்கை விழுவதைத் தடுக்கலாம்; தள்ளிப்போடலாம். அதற்கு என்ன செய்ய வேண்டும்.
தலைமுடிகளின் வேர்க் கால் எப்படி இருக்கிறது? அதற்கு உயிர் இருக்கிறதா? மறுபடியும் வளரச் செய்ய முடியுமா என்று முடியை ஸ்கேன் செய்து பார்த்து, உடனடியாகச் சிகிச்சை மேற்கொள்வதன் மூலம் வழுக்கையைத் தடுக்கலாம்.
வழுக்கை விழத் தொடங்கியதுமே சில ஹார்மோன் மாத்திரைகளைச் சாப்பிட்டு வந்தால் மேன்மேலும் முடி கொட்டாது. ஆனால், மாத்திரை போடுவதை நிறுத்தியதும் முடி கொட்ட ஆரம்பித்துவிடும். எனவே, இது நிரந்தரத் தீர்வு ஆகாது. ‘மினாக்சிடில்’ (Minoxidil) எனும் தைலத்தைத் தடவினால், ஓரளவு முடி வளரும். வழுக்கை விழுவதும் தள்ளிப்போகும். ஆனால், இந்தத் தைலத்தையும் தொடர்ந்து தடவிவர வேண்டும்.
ஊட்டச்சத்து முக்கியம்!
சிறு வயதிலிருந்தே தலைமுடியைப் பராமரிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். எண்ணெய் தேய்த்துக் குளிப்பது முக்கியம். சருமத்தையும் முடியையும் வறண்டுபோகாமல் வைத்திருக்க, எண்ணெய் நிச்சயம் உதவும். ஷாம்பு போட்டுக் குளிக்கக் கூடாது. பதிலாக, சீயக்காய் குளியல் நல்லது. வெயிலில் அதிகமாக அலையக் கூடாது. கடினமான சீப்புகளைப் பயன்படுத்தக் கூடாது. தலைக்குக் குளித்ததும், முடியை உலர்த்த ‘டிரையரை’ப் பயன்படுத்தக் கூடாது. பேன், பொடுகு, பூஞ்சை போன்றவை தொற்றாமல் தலையைச் சுத்தமாகப் பராமரிக்க வேண்டியது முக்கியம்.
அடர் பச்சைக் காய்கறிகள், கீரைகள், பேரீச்சை, கேரட், முட்டை, பருப்பு, பால், பால் பொருட்கள், முழு தானியங்கள், வாழைப்பழம், மீன் போன்ற உணவு வகைகளை அதிகமாகச் சாப்பிட்டால் முடி வளர்வதற்கான எல்லாச் சத்துகளும் கிடைக்கும்.
*என்ன சிகிச்சை?*
பெரும்பாலும் பின்னந்தலையில் வழுக்கை விழாது. முன் நெற்றியின் பக்கவாட்டில் தொடங்கி, உச்சித் தலை வரைக்கும் வழுக்கை விழும். ஆகவே, பின்னந்தலையில் உள்ள முடியை வேரோடும் தோலோடும் எடுத்து வழுக்கை உள்ள இடத்தில் நாற்று நடுவதைப்போல் நடுவதற்கு ‘முடி மாற்று சிகிச்சை’ (Hair transplantation) என்று பெயர்.
இதெல்லாம் தேவையில்லை என்று சொல்பவர்களுக்கு இருக்கவே இருக்கிறது ‘விக்.நன்றி.
25/03/2023
*🌻பேலியோ உணவுமுறை🌻*
பேலியோ உணவு என்பது கற்கால உணவுகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.இதை " பேலியோலித்திக் டயட்"(Paleolithic diet) என்றும் " கற்கால உணவுமுறை" என்றும் சொல்வார்கள். பழங்கால குகை வாழும் மாந்தர்கள் வேட்டையாடுபவர்களாகவும் உணவு சேகரிப்பவர்களாகவும் இருந்தனர். அவர்கள் வேளாண்மையை கண்டறியாததால் தானியங்களை கூடுதலாக உண்ணவில்லை.
இந்த முறையில் காய்கறிகள், உலர்ந்த கொட்டைகள், வேர்கள், இறைச்சி ஆகியவை அடங்கும். இந்த உணவுமுறையில் இடம் பெறாதவை பால் சார்ந்த உணவுகள், தானியங்கள், சர்க்கரை, பருப்பு வகைகள் ,பதப்படுத்தப்பட்ட உணவுகள், உப்பு ,காபி மற்றும் மது போன்றவை அடங்கும்.
பேலியோ உணவுமுறை என்றால் என்ன?
No carbs, no sugar என்பதுதான் இந்த பேலியோ உணவுமுறையின் அடிப்படை கொள்கை. அதாவது கார்போஹைட்ரேட் மற்றும் சர்க்கரை நிறைந்த உணவுப் பொருட்களை தவிர்க்க வேண்டும் அதே நேரத்தில் கொழுப்பு உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்கிறது இந்த வித்தியாசமான பேலியோ உணவுமுறை பொதுவாக உடல் எடை குறைக்க வேண்டும் என்றால் கொழுப்பை தவிர்க்க வேண்டும் என்பர் ஆனால் இந்த உணவு முறையில் கொழுப்பை சேருங்கள் என்று கூறுவதற்கு காரணம் உடம்பிற்கு போதுமான கார்போஹைட்ரேட் சர்க்கரை கிடைக்காத பட்சத்தில் உடலானது ஆற்றலை தேட ஆரம்பிக்கும் அப்போது உடம்பில் தேங்கிய உள்ள கொழுப்புகளை எரித்து ஆற்றலாக மாற்றி செலவழிக்க ஆரம்பித்து விடும் இதனால் கொழுப்புகள் எளிதாக கரையும் அதே நேரத்தில் உடம்பு எடையும் குறையும் என்கிறது இந்த பேலியோ உணவு முறை.
பேலியோ உணவுமுறை உடல் சுகாதாரத்தை மேம்படுத்தும் என்று கூறப்படுகிறது. இருந்தாலும் இந்த உணவு முறை மருத்துவரின் ஆலோசனை பெற்ற பிறகு தொடங்குவது சிறந்தது .
இதை உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு கடைபிடிக்கும் ஒரு முறையாக உள்ளது. தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் அரிசி, கோதுமை போன்ற தானியங்களை தவிர்த்து ,நல்ல கொழுப்பு அடங்கிய முட்டை ,மீன் ,இறைச்சி, உலர் கொட்டைகள் போன்றவற்றை உண்பது பேலியோ உணவுமுறை ஆகும் .
இது வாழ்நாள் முழுமைக்கும் ஆன ஒரு ஆரோக்கியம் தரும் உணவு முறை. எடையை குறைக்க விரும்பும் விரும்புபவர்கள் மருத்துவர்களின் ஆலோசனை பெற்று இந்த உணவு முறையை கடைபிடிக்கலாம். இதில் சில உணவுகளை தவிர்ப்பது ஊட்டச்சத்து பற்றாக்குறையை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது என்கிறார்கள் ஊட்டச்சத்து நிபுணர்கள்.
பேலியோ உணவுமுறையில் உண்ணக்கூடிய காய்கறிகள்:
காலிபிளவர் ,ப்ரோக்கோலி, முட்டைக்கோஸ் ,முள்ளங்கி, பாகற்காய் ,கேரட், பீட்ரூட் (இரண்டையும் அதிகபட்சம் 200கி. எடுக்கலாம்.அதிலும் தினமும் எடுக்கக் கூடாது), தக்காளி, வெங்காயம், வெண்டைக்காய், கத்தரிக்காய் ,சுண்டைக்காய், வாழைத்தண்டு ,அனைத்து வகை கீரைகள், முருங்கை ,சுரைக்காய், ஆலிவ், செலரி, வெள்ளரி, சீமை சுரைக்காய்,புடலங்காய், குடைமிளகாய் ,பச்சை மிளகாய், சிவப்பு மிளகாய் ,பூசணி, காளான் தேங்காய், எலுமிச்சை, பூண்டு ,இஞ்சி, ,கொத்தமல்லி, மஞ்சள் கிழங்கு, அவகாடோ, பீர்க்கங்காய்.
தவிர்க்க வேண்டிய காய்கறிகள்:
மரவள்ளிக்கிழங்கு ,சர்க்கரைவள்ளி கிழங்கு, உருளைக்கிழங்கு, பீன்ஸ் (ராஜ்மா உள்ளிட்டவை) ,சன்னா, சுண்டல், பருப்பு வகைகள் அனைத்தும், பயறு வகைகள் அனைத்தும், நிலக்கடலை ,சோயா மீல் மேக்கர், அவரைக்காய், பனங்கிழங்கு, பலாக்காய், வாழைக்காய் ,பழங்கள் அனைத்தும்.
பேலியோ உணவுமுறை விதிகள்:
மூன்று வேளையும் வீட்டில் சமைத்த உணவு மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும் சர்க்கரை தேன் இனிப்புகள் கோக் அல்லது பெப்சி உணவகத்தில் சமைத்தது பேக்கரி பொருட்கள் இனிப்பு காரம் அனைத்தையும் தவிர்க்க வேண்டும்.
பேலியோ உணவுமுறை — காலை
சுத்த சைவம் —
100 கிராம் பாதாம் அல்லது பிஸ்தா அல்லது வால்நட் போன்றவை எடுக்கலாம் பாதாம் விலை அதிகம் என கருதுபவர்கள் காலை உணவாக திபெத்திய பட்டர் டீ எடுத்துக் கொள்ளலாம்.
அசைவம் —
மூன்று முட்டை ஆம்லெட். முழு முட்டை வெள்ளை கரு அல்லது மஞ்சள் கரு சேர்த்து. தேவைப்பட்டால் நான்கு முட்டை ஆம்லெட் கூட உண்ணலாம். பிரச்சனை இல்லை. ஆனால் பசி அடங்குவது முக்கியம். சமையல் எண்ணெய் நெய் உபயோகப்படுத்தலாம்.நாட்டுக்கோழி முட்டை மிகச் சிறப்பு. முட்டையை ஸ்க்ராம்பிள், ஆஃப்பாயில், ஃபுல் பாயில் என எப்படியும் உண்ணலாம்.
மதியம்
நூறு கிராம் பாதாம் அல்லது பிஸ்தா அல்லது வால்நட்ஸ் .இவற்றை நெய்யில் வதக்கி உண்ணலாம். ஊற வைத்தும் உண்ணலாம். காலிஃப்ளவர் ரைஸ் ,சிக்கன் அல்லதுமட்டன் சூப் சாப்பிடலாம்.
காலிபிளவர் உண்ணுதல்.
காலிபிளவரை பாத்திரத்தில் ஆவியில் வைத்து எடுத்து அரிசி போல் பாவித்து குழம்பு ஊற்றி உண்ண வேண்டும். காய்கறி சூப் ஏராளமாக பருகலாம் .உடன் சிறிது தேங்காய். பசி அடங்கவில்லை எனில் அவசியமானால் மட்டும் தேங்காய் சேர்க்கலாம்.
தினமும் 100 கி கீரை சேர்த்துக் கொள்ளலாம்.
இரவு
4 முட்டை மட்டும் சாப்பிடலாம்.
அல்லது
முழு கொழுப்பு பாலில் செய்த பன்னீர் டிக்கா, பன்னீர் மஞ்சூரியன்.பசி அடங்கும் அளவு சாப்பிட்டால் போதும்.
நெய், வெண்ணெய், செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் பயன்படுத்துவது நல்லது.
_ பொது நலம் இணையம்.
நன்மைகள்
இந்த உணவு முறை சுத்தமானது. நாம் வழக்கமாக சேர்க்கும் செயற்கை சேர்க்கைகளான பிரிசர்வேட்டிவ்ஸ், செயற்கை சுவையூட்டிகள் ஆகியவை தவிர்க்கப்படுகின்றன.
ஃபிரஷ்ஷான காய்கறிகளை சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி மேம்படுகிறது. செடிகளில் உள்ள ஆன்ட்டி inflamatory என்னும் நன்மை தரும் பொருள் நமக்கு கிடைக்கிறது.
'ரெட்மீட்' எனப்படும் ஆடு மற்றும் மாட்டு இறைச்சி உண்பதால் உடலில் அதிக அளவு இரும்புச் சத்து சேர்கிறது.
அதிக அளவில் புரதம் மற்றும் நல்ல கொழுப்பு சத்து சாப்பிடுவதால் திருப்தியான உணர்வு ஏற்படும். குறைந்த உணவு வகைகளை உண்பதால் உடல் எடை குறையும்.
பேலியோ உணவு வாழ்க்கை முறை:
இன்சுலின் சுரப்பை தூண்டி சர்க்கரை நோய் வராமல் தவிர்க்கும் சர்க்கரை நோய் ஏற்பவர்களுக்கு அது தீவிரமடையாமல் பார்த்துக் கொள்ளும
இந்த உணவு முறை பின்பற்றுபவர்களுக்கு புற்று நோய் சர்க்கரை மற்றும் இதய நோய்கள் ஏற்படும் வாய்ப்பு குறையும்.
பேலியோ உணவுமுறையும் உடல் எடை குறைப்பும்:
ஒவ்வொரு முறையும் அதிக அளவில் புரதமும் நல்ல கொழுப்பும் நிறைந்த உணவை உட்கொள்ள வேண்டும். கலோரி அளவை குறைப்பதற்காக உணவின் அளவை குறைத்துக் கொள்ளக்கூடாது .
ஒவ்வொரு வேளையும் குறைந்தபட்சம் ஒரு தாவர வகை உணவை உட்கொள்வது சிறந்தது. அதிக அளவில் ஃபிரஷ்ஷான காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் .பட்டினி கிடப்பதை தவிர்க்கவும். ஏனெனில் உணவின் அளவை குறைக்காமலேயே நம்மால் உடல் எடையை குறைக்க முடியும். உடல் செயல்பாட்டை அதிகரிக்க பிடித்த உடற்பயிற்சியை( நடைப்பயிற்சி, ஏரோபிக்ஸ் பயிற்சி என்று ஏதேனும் ஒன்றை) தேர்ந்தெடுத்து அதை தினசரி தவறாமல் செய்ய வேண்டும். அதிக அளவில் இறைச்சி மற்றும் காய்கறிகளை சாப்பிடலாம்.
திபெத்திய வெண்ணெய் தேநீர் செய்முறை:
வெண்ணெய் தேனீர் அல்லது சில நேரங்களில் திபெத்திய தேநீர் என்று அழைக்கப்படுவது மிகவும் எளிதானது .மற்றும் 10 நிமிடங்களுக்கு மேல் இதற்கு தேவைப்படாது.
இதற்கு தேவையான முக்கிய பொருட்கள்:
இரண்டு சிட்டிகை தேயிலைகள் ,
உப்பு சேர்க்காத வெண்ணைய் 2 கீயூப்ஸ் ,
கால் கப் பால்,
ஒரு சிட்டிகை உப்பு
இரண்டரை கப் தண்ணீர் .
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொதிக்க வைத்து , .இரண்டு சிட்டிகை தேயிலையை அதில் போட்டு இரண்டு நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும் .
வடிகட்டியத் தேநீரூடன், உப்பு, , வெண்ணைய் மற்றும் பால் ஆகியவற்றை சேர்த்து இரண்டு மூன்று நிமிடங்கள் கலக்க வேண்டும் இப்போது அருந்துவதற்கு தயாரானது வெண்ணெய் தேநீர்.
இது பேலியோ உணவுமுறையில் கடைபிடிக்கப்படும் ஒரு உணவாகும்.
21/03/2023
*🌻இரத்த ஓட்டம்🌻*
✳ சீராக நடை பெற்றாலே உடம்பில் நோய்களே இல்லாமல் சீரான வளர்ச்சியையும் ,முழு செயல் திறனையும் காணமுடியும் இதற்கு, நாம் ,இதயத்தையும், இரத்த குழாய்களையும் பாதுகாத்தல் அவசியம் .
இரத்தம் மாபெரும் வேலையை நம் உடலினுள் இயங்கிக் கொண்டே இருக்கின்றது. இந்த ரத்த ஓட்டம் சீராக இல்லை என்றால் ஏற்படும் பாதிப்புகள் என்னவென்று பார்க்கலாம்.
நமது உடலில் சுற்றோட்ட அமைப்பு சிறிது நேரம் கூட ஓய்வு எடுப்பதில்லை. ஒவ்வொரு நொடியும் இயங்கிக் கொண்டிருக்கின்றது. ஏதோ ஒரு அடிபடும் பொழுதோ ரத்தம் வெளியேறும் பொழுதோ, ரத்தம் ஏற்ற வேண்டிய நிலை வரும் பொழுதோ மட்டுமே அதற்கு அக்கறை காட்டப்படுகின்றது. 5-6 லி ரத்தம் நம் உடல் முழுவதும் சுற்றிக் கொண்டே இருக்கும்.
🇨🇭 #இந்தரத்த_ஓட்டம்_தான்……
⭐ ஆக்ஸிஜனை செல்களுக்கும், சதைகளுக்கும் அளிக்கின்றது.
⭐ செல்களுக்கு அமினோ அமிலம், க்ளூகோஸ் மற்றும் பல சத்துகளை அளிக்கின்றது.
⭐ கழிவு, கார்பன்டை ஆக்ஸைடு, லக்டிக் ஆசிட், யூரியா இவற்றினை நீக்குகின்றது.
⭐ உடலினை நோயிலிருந்து காக்கின்றது.
⭐ ஹார்மோன்களை எடுத்துச் செல்கின்றது.
⭐ அமிலத்தன்மையினையும், உடல் உஷ்ணத்தினையும் சீராய் காக்கின்றது.
⭐ ப்ளேட்லெட்ஸ்-ரத்தம் இறுக உதவும்.
⭐சிகப்பு அணுக்கள்-ஆக்ஸிஜன் எடுத்து கார்பன்டை ஆக்ஸைடு நீக்குகின்றது. ஹைட்ரஜன் மூலம் றிபி அளவினை சீராய் வைக்கின்றது.
⭐வெள்ளை அணுக்கள்-கிருமிகளுடன் போராடுகின்றது.
⭐ப்ளாஸ்மா-ரத்தத்தின் 50 சதவீதம் இது. கார்பன்டை ஆக்ஸைட், க்ளூகோஸ், ஹார்மோன்கள், புரதம், கொழுப்பு, வைட்டமின்கள், தாது உப்புகளை சுமந்து செல்வதே இதுதான்.
இப்படி ஒரு மாபெரும் வேலை நம் உடலினுள் இயங்கிக் கொண்டே இருக்கின்றது.
⭕ #மோசமான_இரத்த_ஓட்டத்திற்கான #காரணங்கள்❓
▶சிகரெட் பிடிப்பது,
▶மது அருந்துவது,
▶காப்ஃபைன் பானங்களை அதிகம் பருகுவது,
▶மோசமான உணவுப் பழக்கம்,
▶உடலுழைப்பு இல்லாமை மற்றும் ஒரே இடத்தில் நீண்ட நேரம் அசராமல் அமர்ந்திருப்பது.
▶பதற்றம்,
▶சர்க்கரை நோய்,
▶தைராய்டு பிரச்சனைகள்,
▶உயர் கொலஸ்ட்ரால்,
▶உடல் பருமன்,
▶உயர் இரத்த அழுத்தம்,
▶இதய கோளாறுகள்,
▶இரத்த நாள கோளாறுகள்,
▶நரம்பு கோளாறுகள்,
▶இரத்த சோகை,
▶ஆஸ்துமா,
▶மூச்சுக்குழாய் அழற்சி,
▶நிமோனியா,
▶பெருந்தமனி தடிப்பு
போன்ற பிரச்சனைகள் இருந்தால், அவர்களது உடலில் இரத்த ஓட்டம் மோசமாக இருக்கும்.
🔯 #மருத்துவக்_காரணங்கள்❓
➡ மருத்துவ ரீதியாக என்று பார்த்தல……
◀ஃபுட் அலர்ஜி,
◀அனீமியா,
◀நரம்புக் கோளாறுகள்,
◀உயர் ரத்த அழுத்தம்,
◀ஒபீசிட்டி,
◀தைராய்டு,
◀கொலஸ்ட்ரால்,
◀சர்க்கரை நோய்
🔴 #இந்தரத்த_ஓட்டம்_சீராக_இல்லை #என்றால்_ஏற்படும்_அறிகுறிகள்❓
உடலில் ரத்த ஓட்டம் குறைவாக இருக்கிறதென்றால் அதன் அறிகுறியாக முதலில் நம் உடல் வெப்ப நிலையில் மாற்றம் தெரியும்,அதன் பிறகு கால்களில் தான் அதிகப்படியான அறிகுறி தெரிந்திடும்.
கால் மறத்துப் போகுதல்,கால் வலி ஆகியவை உண்டாகும். இதனால் கால்கள் வலுவிழக்கும். இது அதிகமாகும் பட்சத்தில் உங்கள் எடையை தாங்கும் சக்தியை உங்கள் கால் இழந்திடும்.
முறையான இரத்த ஓட்டம் உடலின் வெப்பநிலையை சீராக பராமரிக்கும். ஆனால் இரத்த ஓட்டம் ஒருவருக்கு மோசமாக இருந்தால் கை மற்றும் கால்கள் அதீத குளிர்ச்சியை சந்திக்கும்.அதே நேரத்தில் குளிர்காய்ச்சல் கூட ஏற்படும். சிலருக்கு கை,கால்களில் வீக்கம் ஏற்பட்டு சரியாக இயக்க முடியாது.
◀பலவீனமான நகங்கள் மற்றும் முடி உதிர்வது
◀சரும நிற மாற்றம்
◀பசியின்மை
◀பலவீனமான நோயெதிர்ப்பு சக்தி
◀மோசமான மூளை செயல்பாடு
◀செரிமான பிரச்சனைகள்
◀கைகள் மற்றும் பாதங்களில் வீக்கம்
◀களைப்பு
◀குளிர்ச்சியான கைகள் மற்றும் பாதங்கள்
🔯 மூளை செயல் திறன் குறையும்❗
15-20 சதவீத ரத்த ஓட்டம் மூளைக்கே தேவைப்படும். இது குறைந்தால் மறதி, ஓருங்கிணைப்பில் சிரமம் போன்றவை ஏற்படும். பேச்சில் தடுமாற்றம் இருக்கும்.
🔯 கை கால்கள் சில்லிப்பு❗
உடலில் ரத்த ஓட்டம் சீராக இல்லை என்றால் கை, கால்களில் சில்லிப்பு, மரத்து போதல் ஏற்படும். காயங்கள் ஆற கூடுதல் காலம் ஆகும். எளிதில் உடையும் நகம், நிறம் மாறிய சருமம் இவை அறிகுறிகளாக இருக்கும். சர்க்கரை நோயாளிகளுக்கு இவ்வாறு குறைந்த ரத்த ஓட்ட பாதிப்பு ஏற்படலாம்.
🔯 சோர்வு
நாம் எப்படி சாப்பிடாவிட்டால் சோர்ந்து விடுவோமோ, உடலில் மிக நுண்ணிய அளவில் செல்களுக்கு தேவையான அளவு சத்தும், ஆக்ஸிஜனும் கிடைக்கவில்லை என்றால் அவைகளால் செயல்பட இயலாது. சோர்ந்த தசைகள், மூச்சு வாங்குதல், அதிக சோர்வு இவை அதன் அறிகுறிகளாகத் தெரியும்.
🔯 பசியின்மை
ரத்த ஓட்டம் சீராய் இல்லை என்றால் சீரண மண்டலம் பாதிக்கப்படும். கல்லீரல் ரத்தத்தினை சுத்திகரிக்கும். ரத்தத்தில் உள்ள சக்தியினையும் எடுத்துக் கொள்ளும். எடை குறைதல், பசியின்மை இவை சீரான ரத்த ஓட்டமின்மையின் பாதிப்பாக இருக்கலாம்.
🔯 நரம்பு வீக்க நோய்
இந்த பாதிப்பு சரியில்லாத இரத்த ஓட்டத்தின் அறிகுறி. இந்த ரத்த குழாய்களில் இருக்கும் வால்வுகள் வலுவிழக்கின்றன. இதனால் ரத்த ஓட்ட பாதிப்பு ஏற்படலாம்.
🔰 #இரத்தஓட்டம்_சீராக_நடை_பழகு………
🇨🇭 நடைபயிற்சி செய்வதனால் ஏற்படும் நன்மைகள்❓❗
🚶 நடைபயிற்சி (walking) என்பது நோயின்றி வாழ மிகவும் முக்கியமான ஓரு செயல்பாடாகும்.
🚶 நடைபயிற்சியில் மூன்று வகைகள் உண்டு.
🚶 சுவாசம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் குணமடைய உதவுகிறது.
🚶 இரத்த ஓட்டம் சீரடையும்.
🚶 நரம்பு தளர்ச்சி நீங்கி, நரம்பு மண்டலம் சுறுசுறுப்படையும்.
🚶 நாளமில்லா சுரப்பிகள் புத்துணர்ச்சி பெறும்.
🚶 அதிகப்படியான கலோரிகள் எரிக்க உதவுகிறது.
🚶 நரம்புகளை உறுதியாக்குகிறது.
🚶 எலும்பு மூட்டு செயல்பாடுகளை எளிமையாக்குகிறது.
🚶 எலும்புகள் வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கிறது.
🚶 உடலை உறுதியாக வைத்திருக்க உதவுகிறது.
🚶 கெட்ட கொழுப்புச்சத்தின் அளவை குறைக்கிறது.
🚶 மாரடைப்பு - சர்க்கரை நோயினை கட்டுப்பாட்டிற்குள் வைத்து உடலையும், மனதையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்கிறது.
🚶 உடல் மற்றும் மனச்சோர்வினை குறைக்கிறது.
🚶 நன்கு தூங்கிட உதவுகிறது.
🚶 கண் பார்வையை செழுமைபடுத்துகிறது.
ஆரோக்கியமான டயட்
🇨🇭 மெதுவாக நடப்பது 💊
🚶 எப்போதும் நடக்கும் சாதாரண வேகமின்றி, சிரமமின்றி நடப்பதாகும்.
🚶 இந்த வகை நடைபயிற்சி உடல் வலி மற்றும் சோர்வுகளை போக்கும்.
🚶 உடம்பில் உள்ள தசைகளையும், எலும்பு இணைப்புகளையும் இதமாக்கி காயம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளும்.
🚶 உடல் பருமன் உள்ளவர்களுக்கு ஏற்ற நடையாகும்.
🇨🇭 பவர் வாக்கிங் 💊
🚶 கைகளையும், கால்களையும் வேகமாக வீசி நடப்பது.
🚶 இப்படி வேகமாக நடப்பதால் உடம்பில் உள்ள கழிவுகள் எரிக்கப்பட்டு வியர்வை அதிகம் வெளியேறி உடல் சுத்தமாகும்.
🚶 தசைகளும் எலும்புகளும் அதிக வலுவைப் பெற்று தன்னம்பிக்கையை அளிக்கும்.
🚶 இந்த பவர் வாக்கிங் நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு ஏற்ற நடையாகும்.
🇨🇭 ஜாகிங் 💊
🚶 நடக்கும் முறையில் இருந்து சற்று வித்தியாசப்பட்டு மிதமாக, மிக மிக மெதுவான ஓட்டமாக மாறும்.
🚶 அதனால் நிறைய ஆக்ஸிஜன் நுரையீரலுக்குள் சென்று ரத்தத்தை சுத்தப்படுத்தி இதயத்திற்கு அனுப்புகிறது.
🚶 அதேசமயம் தேவையில்லாத கழிவுப்பொருட்களை வெளியேற்றி உடம்பில் உள்ள ஓவ்வொரு அணுவையும் சுத்தம் செய்யும்.
🚶 தினசரி 1/2 மணி முதல் 1 மணி நேரம் வரை ஜாகிங் செய்யலாம்.
🚶 இளைஞர்கள் 1 மணி நேரமும், 30-40 வயதினர் 45 நிமிடங்களும், அதற்கு மேற்பட்ட வயதினர் 20 நிமிடங்களும் நடக்கலாம்.
🇨🇭 ஆரோக்கியமான டயட்
நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்தும். ஆரோக்கியமான டயட்டில் பழங்கள், காய்கறிகள், புரோட்டீன் உணவுகள், நல்ல கொழுப்புக்கள் மற்றும் முழு தானியங்கள் நிறைந்திருக்க வேண்டும். அதிலும் நைட்ரேட் நிறைந்த காய்கறிகள் உடலில் இரத்த ஓட்டத்தை ஊக்குவிக்கும். சில உணவுகள் இரத்த ஓட்டத்திற்கு தடையை ஏற்படுத்தும் இரத்த குழாய்களில் உள்ள அடைப்புக்களைத் தடுக்க உதவும்.
மீன், பசலைக் கீரை, க்ரீன் டீ, ஓட்ஸ், பெர்ரிப் பழங்கள், பூண்டு போன்றவை இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, உடலில் இரத்த ஓட்டத்தையும் சிறப்பாக வைத்துக் கொள்ளும்.
🇨🇭சரியான உடைகளை அணியவும்
உடலில் இரத்த ஓட்டம் சிறப்பாக இருக்க வேண்டுமானால், சரியான உடைகளைத் தேர்ந்தெடுத்து அணிய வேண்டியது அவசியம். ஒருசில உடைகள் இரத்த ஓட்டத்தில் தடையை ஏற்படுத்தும். அதில் உடலை இறுக்கும்படியான உடைகள் இரத்த ஓட்டத்தைத் தடுக்கும். எனவே மிகவும் இறுக்கமான உடைகளை அணிவதைத் தவிர்த்திடுங்கள். டைட்ஸ், இறுக்கமான ஜீன்ஸ் போன்றவை மறைமுகமாக இரத்த ஓட்டத்தில் இடையூறை ஏற்படுத்தும். எனவே எப்போதும் சற்று தளர்வான உடைகளை அணியுங்கள்.
🇨🇭போதுமான உடற்பயிற்சி
உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதற்கான சிறப்பான ஓர் வழி தான் உடற்பயிற்சி. அதற்காக கடுமையான உடற்பயிற்சிகளில் ஈடுபட வேண்டுமென்ற அவசியம் எதுவும் இல்லை. 10 நிமிடம் வாக்கிங் பயிற்சி செய்தாலே, இரத்த ஓட்டம் உடலில் சிறப்பாக இருக்கும். உங்களுக்கு எளிய உடற்பயிற்சிகளின் மூலம் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க வேண்டுமா? அப்படியானால் ரன்னிங், நீச்சல், ஜாக்கிங் போன்ற பயிற்சிகளில் ஈடுபடுங்கள். ஸ்கிப்பிங் கூட இரத்த ஓட்டத்தைத் தூண்டும் அற்புத பயிற்சியாகும். எனவே உங்களுக்கு பிடித்ததை தினமும் தவறாமல் செய்து வாருங்கள்.
🇨🇭மசாஜ்
நல்ல உடல் மசாஜ் கூட இரத்த ஓட்டத்தைத் தூண்டும். அதிலும் தோள்பட்டை பகுதிகளில் மசாஜ் கொடுக்கப்படும் போது, அதனால் உடலின் முக்கிய உறுப்புகளில் இரத்த ஓட்டம் மேம்படும். மசாஜ் செய்யும் போது, ஆலிவ் ஆயில், தேங்காய் எண்ணெய் போன்றவற்றைக் கொண்டு மசாஜ் செய்தால் இன்னும் சிறப்பான பலன் கிடைக்கும். முக்கியமாக வாரத்திற்கு 2-3 முறை ஒருவர் உடல் மசாஜ் எடுத்துக் கொள்வதால், உடலில் இரத்த ஓட்டம் சிறப்பாக இருக்கும்.
🇨🇭ஹைட்ரோ தெரபி
தினமும் போதுமான அளவு நீரைக் குடிக்க வேண்டும். உடலுறுப்புக்களின் முறையான செயல்பாட்டிற்கு உடலில் போதுமான நீர்ச்சத்து இருக்க வேண்டியது அவசியம். இரத்தத்தின் அடர்த்தி அதிகரிக்காமல் இருக்க வேண்டுமானால் அதிகளவு நீரைக் குடிக்க வேண்டும். தண்ணீர் உடலில் இருந்து டாக்ஸின்களை வெளியேற்ற உதவும். எனவே தினமும் குறைந்தது 7-8 டம்ளர் நீரை குடிக்க வேண்டியது அவசியமாகும். இன்னும் ஒரு சிறப்பான வழி சுடுநீரில் குடிப்பது. சுடுநீரில் குடிப்பதாலும், உடலில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும்.
🇨🇭மன அழுத்தத்தைக் குறையுங்கள்
மன அழுத்தம் உடலை பெரிதும் மோசமாக பாதிக்கும். அதில் ஒன்று மோசமான இரத்த ஓட்டத்திற்கு வழிவகுப்பது. ஒருவர் மன அழுத்தத்தைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டால், அதனால் உடலில் இரத்த ஓட்டம் சிறப்பாக இருக்கும். அளவுக்கு அதிகமான மன அழுத்தம் இதயத்தின் செயல்பாட்டில் பெரும் பாதிப்பை உண்டாக்கும். முக்கியமாக மன அழுத்தம் இரத்த நாளங்களை சுருங்கச் செய்து, இரத்த ஓட்டத்தைக் குறைக்கும். ஒருவரது மன அழுத்தத்தைக் குறைக்க ஏராளமான வழிகள் உள்ளன. அந்த வழிகளை முயற்சித்து இரத்த ஓட்டத்தை சிறப்பாக வைத்துக் கொள்ளுங்கள்.
🇨🇭உப்பு அளவை குறையுங்கள்
அளவுக்கு அதிகமான உப்பு உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. இது இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் மற்றும் இரத்த ஓட்டத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். அதிகளவிலான உப்பு தமனிகளை தடிமனாக்கும். குறிப்பிட்ட சில உணவுகளில் சோடியம் ஏராளமான அளவில் உள்ளது. அதில் பதப்படுத்தப்பட்ட இறைச்சி, உறைய வைக்கப்பட்ட பிட்சா, கேன் சூப் போன்றவை குறிப்பிடத்தக்கவை. இந்த உணவுகள் உட்கொள்வதை ஒருவர் தவிர்த்தால், மோசமான இரத்த ஓட்டத்தைத் தவிர்ப்பதோடு, உடல் ஆரோக்கியமும் மேம்படும்.
💊பாதாம்
பாதாம் கொட்டைக்கு எப்பொழுதும் மிக உயர்ந்த இடம் உண்டு. இதில் உள்ள அபரிமித வைட்டமின் ஈ, கால்ஷியம், மக்னீசியம், நார்சத்து, ரிபோப்ளேவின், இரும்பு சத்து இவை எண்ணற்ற நன்மைகளை உடலுக்குத் தருகின்றது. இந்த கொட்டை சர்க்கரை நோயினால் ஏற்படும் வீக்கத்தினை குறைக்கின்றது.
💊பிஸ்தா
இது உடலுக்கு நல்ல கொழுப்பினைத் தருகின்றது. உயர் ரத்த அழுத்தத்தினை குறைக்கின்றது. இருதய நோய் ஏற்படும் வாய்ப்பினை வெகுவாய் குறைக்கின்றது.
இதில் மக்னீசியம், காப்பர், வைட்டமின் பி6 இவை இருக்கின்றன. ரத்தத்தில் திடீர் என உணவுக்குப்பின் சர்க்கரை அதிகம் உயர்வதனை இது தடுக்கின்றது.
💊வால்நட்
வாதுமை கொட்டை என தமிழில் கூறப்படுகின்றது. இதில் ஓமேகா 3, ஏ.எல்.ஏ. போன்றவை கெட்ட கொழுப்பினை குறைக்கின்றது. உயர் ரத்த அழுத்தத்தினை குறைக்கின்றது. இருதய பாதிப்பினை குறைக்கின்றது. உடலில் வீக்கத்தினை குறைக்கின்றது. மூளை செயல் திறன் கூடுகின்றது.
💊முந்திரி
முந்திரி கொட்டையில் ஆன்ட்டி ஆக்ஸிடன்ட், இரும்பு, காப்பர், மக்னீசிய சத்து இருக்கின்றது. சிறு அளவில் எடுத்துக் கொள்வது பல நோய்களை தவிர்ப்பதாக இருக்கும்.
💊காரட் சாறு குடித்தால் இதயத்திற்கு நல்லது .இதில் பெருமளவு கரோட்டீன் உள்ளது
💊தினமும் காலையில் 6சின்ன வெங்காயம் ,1பூண்டு சேர்த்து சிறிது எண்ணெய் வீட்டு வதக்கி சாப்பிடலாம்
💊தேனில் ஊறிய பேரீச்சம் பழம் இதயம் வலிமை பெற உதவும்
💊இதய தமணியை அடைப்புகள் இன்றி காத்திட காரட் மற்றும் கொள்ளு ரசம் சிறந்தது
💊முருங்கை கீரை சாற்றைசூப்பாக செய்து வாரம் 1முறைஅருந்துதல் நல்லது
💊100மி .லி பாலில் 25கிராம் பூண்டு தட்டி போட்டு வேகவைத்து அருந்தலாம்
💊 செம்பருத்தி பூ மற்றும் வெள்ளை தாமரை பூவிதழ்ழுடன் நீர் சேர்த்து கொதிக்க வைத்து பனை வெல்லம்
சேர்த்து அருந்தலாம். வலிமையான இதயம் இருந்தால் வளமான வாழ்வு பெறலாம்.
💊மாங்கொட்டையை காய வைத்து அதனுள் உள்ள பருப்பை எடுத்து நெய்யில் வறுத்து பொடியாக்கி வைத்து கொண்டு தினமும் தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் ரத்தசோகை உடல் சோர்வு குணமாகும் ..
இதயத்தில் இரத்த ஓட்டம் சீராகி இதயத்தை பலப்படுத்தும் ..
சர்க்கரை பாதிப்பையும் தடுக்கிறது.
20/03/2023
*🌻கல்லீரல் - ஒரு பார்வை🌻*
ஈரல் ஒரு வேதியியல் தொழிற்சாலை போல் ஓயாது இயங்குகிறது.
உடலின் செயல்பாடுகள் அனைத்திற்கும் முக்கிய காரணியாக இருக்கும் உறுப்பு ஈரல்தான்.
உடலில் உள்ள உறுப்புகளில் கல்லீரல் மிகவும் முக்கியமான ஒரு உறுப்பு.
ஒரு வேளை கல்லீரல் சரியாக இயங்காவிட்டால், உடனே அதற்கு சரியாக சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும்.
இந்த மாதிரி கல்லீரல் பாதிப்படைவதற்கு காரணங்கள்...
ஆல்கஹால் அதிகம் குடிப்பது,
அதிகமான கொழுப்புள்ள உணவுகளை சாப்பிட்டு, அதனால் கல்லீரலில் கொழுப்புக்கள் அதிகம் சேர்ந்து பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
பசித்த பின் சரியான நேரத்திற்கு சாப்பிடாமல் இருந்தாலும் , கல்லீரலில் கொழுப்புகள் அதிகரித்துவிடும்.
கல்லீரல் பாதிக்கப்பட்டிருந்தால், என்னென்ன அறிகுறிகள் இருக்கும் என்பதைக் கீழே காண்போம்!!
வாய் துர்நாற்றம்:
கல்லீரலானது சரியாக இயங்கவில்லையெனில், வாயிலிருந்து கடுமையான நாற்றம் வரும்.
ஏனெனில் அப்போது உடலில் அம்மோனியாவானது அதிகமாக உற்பத்தி செய்யப்பட்டிருக்கும்.
கண்களைச் சுற்றி கருவளையம் மற்றும் சோர்வான கண்கள் மற்றும் பார்வைக்குறைபாடுள்ள கண்கள்.
கல்லீரல் சரியாக இயங்காவிட்டால், தோலில் பாதிப்பு மற்றும் சோர்வு போன்றவை ஏற்படும்.
அதிலும் குறிப்பாக கண்களைச் சுற்றி கருவளையங்கள் ஏற்பட்டு, சுருக்கங்களோடு காணப்படும்.
செரிமானப் பிரச்சனை அதிகம் ஏற்படும் .
எண்ணெய்ப் பண்டங்களையும், கொழுப்புப் பொருட்களையும் சாப்பிடும் சமயம் அதிக நெஞ்செரிச்சல் உண்டாகும் .
கல்லீரலில் கொழுப்பானது அதிகம் சேர்ந்திருந்தால்,
தண்ணீர் சரியாக வெளியேறாமல் இருப்பதால் கல்லீரல் வீக்கமடையும் ,இதனால் மேல் வயிறு வீக்கமடையும் . இத்தகைய பிரச்சனை உடலில் தெரிந்தால், அது கல்லீரல் பழுதடைந்துள்ளதற்கான அறிகுறியாகும்
வெளுத்த சருமம்:
கல்லீரலில் பாதிப்பு இருந்தால், சில சமயங்களில் சருமத்தில் உள்ள மெலனின் நிறமிகள் நிறமிழந்து, சருமத் தோலானது திட்டுதிட்டாக ஆங்காங்கு வெள்ளையாக காணப்படும்
அடர்ந்த சிவந்த மற்றும் மஞ்சள் நிற சிறுநீர் மற்றும் கழிவுகள்:
உடலில் இருந்து வெளியேறும் கழிவுகள் அடர்ந்த கரு நிறத்தில் இருக்கும்.
இந்த மாதிரி எப்போதாவது ஏற்பட்டால், அதற்கு உடலில் வறட்சி என்று அர்த்தம். ஆனால், தொடர்ச்சியாக இருந்தால், அது கல்லீரல் பழுதடைந்ததற்கான அறிகுறியாகும்.
மஞ்சள் நிற கண்கள்:
கண்ணில் உள்ள வெள்ளை பகுதி மஞ்சள் நிறத்தில் காணப்பட்டால், அது மஞ்சள் காமாலையாக இருக்கலாம்.
அதாவது கல்லீரலில் தொற்று ஏற்பட்டுள்ளது,
அல்லது பித்தப்பையில் உள்ள பித்த நீர் (இதுதான் மஞ்சள் நிறத்தை அளிக்கிறது )உடலில் கலந்து , உடலை விஷமித்த நிலைக்குக் கொண்டு செல்கிறது என்று பொருள் ,
பித்தப்பையில் கல் உண்டாகி பித்தப்பையின் வாயிலை அடைத்துவிட்டாலும் இது நிகழும்.எனவே அதற்கேற்ப முறையான சிகிச்சை செய்ய வேண்டும்.
வாய் கசப்பு:
கல்லீரலில் பித்தப்பையில் பைல் என்னும் நொதியானது உற்பத்தி செய்யப்படும். அந்த பைல் நொதி தான் கசப்பான சுவையை ஏற்படுத்துகிறது.
எனவே வாயில் அதிக கசப்பு இருந்தால், கல்லீரலில் பாதிக்கப்பட்டுள்ளது என்று அர்த்தம்.
இப்பொழுது ஈரலை எவ்வாறு சுத்தம் செய்வது என பார்ப்போம்.
உலர்ந்த முந்திரி எனப்படும் கிஸ்மிஸ் உங்கள் ஈரலை சுத்தப்படுத்தும் ஒரு எளிய மருந்தாகும்.
காலையில் எழுந்தவுடன் அரை கப் உலர்ந்த திராட்சயை தண்ணீரில் 15 நிமிடம் ஊற வைக்கவும்.
பிறகு நன்றாக கழுவ்வும். மறுபடியும் சூடாக்கி ஆறவைத்த தண்ணீரில் 24 மணி நேரம் ஊற வைக்கவும்.
அடுத்த நாள் காலையில் முதலில் வெறும் வயிற்றில் ஊறவைத்த தண்ணீரை குடிக்கவும்.
அத்துடன் ஊறவைத்த உலர்திராட்சையையும் சாப்பிடவும்.
பிறகு படுக்கையில் ஒன்றரை மணிநேரம் அல்லது இரண்டு மணிநேரம் ஒரு பாட்டிலில் மிதமான சூடு தண்ணீர் நிறைத்த ஹாட் வாட்டர் பேக் அல்லது பாட்டில் கொண்டு வலது பாகம் வயிற்றில் சூடுபடும் படியாக கிடந்து ஒய்வெடுக்க வேண்டும்.
இவ்வாறு வாரத்தில் ஒரு நாள் வீதம் ஒரு மாதம் செய்யவும்.
இந்த முறையில் வருடத்தில் இரண்டு தடவை மட்டும் செய்ய வேண்டும். அதற்க்கு மேல் செய்யக்கூடாது.
ஈரல் பாதிப்பு நீங்க மற்றொரு எளிய மருந்து:
ஈரல் நோயைக் குணப்படுத்த, சோம்பும் ஒரு மருந்தாகப் பயன்படுகிறது.
சோம்பை இளம் வறுவலாக வறுத்து பொடி செய்து, அதனுடன் தேன் கலந்து காலை மாலை 1 டீஸ்பூன் அளவு சாப்பிட்டு வந்தால், ஈரல் நோய் குணமாகும்.
19/03/2023
*பொட்டாசியம் உள்ள உணவு வகைகள்*
அதிக உப்பு உட்கொள்வது இரத்த அழுத்தத்தை அதிகரிப்பதால், இதய நோய்க்கு வழிவகுக்கும். அதே நேரத்தில் அதிக பொட்டாசியம் உட்கொள்வது இரத்த நாளங்களை தளர்த்தவும் , இரத்த அழுத்தத்தை குறைக்கும் போது சோடியத்தை வெளியேற்றவும் உதவும். நம் உடலுக்கு ஒவ்வொரு நாளும் சோடியத்தை விட அதிக பொட்டாசியம் தேவைப்படுகிறது.
* 14-18 வயதுடைய பதின் வயது பெண்களுக்கு, தினசரி 2,300 மி.கிராமும், 19 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு, 2,600 மி.கிராமும், கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்களுக்கு, வயதைப் பொறுத்து 2,500-2,990 மில்லி கிராம் வரை தேவைப்படுகிறது.
• 14-18 வயதுடைய பதின் வயது ஆண்களுக்கு, 3,000 மி.கிராமும், பத்தொன்பது வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு 3,400 மி.கிராமும் தேவைப்படுகிறது.
*பொட்டாசியம் உள்ள உணவு வகைகள்:*
கீரைகள், சுண்டல் வகைகள், கொட்டைகள், பால் உணவுகள், பரங்கி போன்ற மாவுச்சத்து காய்கறிகள், உலர்ந்த பழங்கள் (திராட்சை, ஆப்ரிகாட்), சுண்டல், பருப்பு வகைகள், உருளைக்கிழங்கு, ப்ரோக்கோலி, பீட்ரூட் கீரைகள், வெண்ணெய், வாழைப்பழங்கள், பாகற்காய், ஆரஞ்சு, ஆரஞ்சு சாறு, தேங்காய் தண்ணீர், தக்காளி, பால், சோயா பால், பாதாம் பால், தயிர், முந்திரி, பாதாம், கோழிக்கறி, சால்மன் மீன்.
18/03/2023
*செரிமான பிரச்சனை குணமாக தினமும் 5 உலர் திராட்சை போதும்..!*
செரிமான பிரச்சனை குணமாக தினமும் 5 உலர் திராட்சை போதும்..!
dry grapes | மலசிக்கல் பிரச்சினையால் அவதிப்படும் முதியோர்களுக்கு இந்த உலர் திராட்சையானது மிகவும் சிறந்த ஓர் மருந்தாக பயன்படுகிறது. தினமும் இதனை சாப்பிட்டால் மலசிக்கல் பிரச்சினை தீரும்.
உலர் பழங்களில் எப்போதுமே முதலிடத்தில் இருப்பது திராட்சை தான். சாதாரணமாகவே திராட்சை பழம் மிகவும் சத்தானது. அவற்றை உலர்த்தும் செயல்முறை திராட்சையை மேலும் அதிக ஊட்டச்சத்து மற்றும் கலோரி மிக்க தாக்குகிறது. பண்டைய காலத்தில் ஃபுட் பாய்ஸனிற்கு சிகிச்சை அளி
உலர் பழங்களில் எப்போதுமே முதலிடத்தில் இருப்பது திராட்சை தான்.
சாதாரணமாகவே திராட்சை பழம் மிகவும் சத்தானது. அவற்றை உலர்த்தும் செயல்முறை திராட்சையை மேலும் அதிக ஊட்டச்சத்து மற்றும் கலோரி மிக்க தாக்குகிறது.
ஐந்து உலர் திராட்சையை ஒரு கப் நீரில் இரவு உறங்குவதற்கு முன் ஊற வைத்து மறுநாள் காலையில் ஊற வைத்த திராட்சை மற்றும் அதனுடன் நீரையும் பருக வேண்டும். இவ்வாறு சாப்பிட்டு வருவதன் காரணமாக நம் உடலுக்கு அதிகப்படியான சத்துக்கள் கிடைக்கிறது.
ரத்த சோகையை தடுக்கும் : உலர் திராட்சையில் நிரம்பி இருக்கும் இரும்பு சத்து ரத்த சோகையை தடுக்க உதவுகிறது. மேலும் உலர் திராட்சையில் காப்பர் மற்றும் உடலின் பல்வேறு பாகங்களுக்கு ஆக்ஸிஜனை எடுத்துச் செல்ல தேவையான சில வைட்டமின்களும் உள்ளன. எனவே தினமும் உலர்
ரத்த சோகையை தடுக்கும் : உலர் திராட்சையில் நிரம்பி இருக்கும் இரும்பு சத்து ரத்த சோகையை தடுக்க உதவுகிறது. மேலும் உலர் திராட்சையில் காப்பர் மற்றும் உடலின் பல்வேறு பாகங்களுக்கு ஆக்ஸிஜனை எடுத்துச் செல்ல தேவையான சில வைட்டமின்களும் உள்ளன.
இதய நோய் அபாயத்தை தவிர்க்க : இதன் காரணமாக இதயம் சார்ந்த பாதிப்புகள் வராதவாறு பாதுகாக்கிறது. கல்லீரலையும் பாதுகாக்கிறது. உலர் திராட்சையில் உள்ள அதிகப்படியான ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
புற்றுநோய் : உலர் திராட்சை புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கும். மேலும் புற்றுநோய் மற்றும் கட்டி வளர்ச்சிக்கு காரணமாக இருக்கும் ஆக்ஸிஜனேற்ற சேதம் மற்றும் ஃப்ரீ ரேடிக்கல்ஸ்களில் இருந்து உலர் திராட்சை நம்மை பாதுகாக்கலாம்.
40 கிராம் அல்லது ஒரு கையளவு உலர் திராட்சையில் கலோரிகள்: 108, புரோட்டின்- 1கிராம், கார்போஹைட்ரேட்ஸ்: 29 கிராம், ஃபைபர் : 1 கிராம், சுகர்- 21 கிராம் உள்ளிட்டவை அடக்கம். தவிர உலர் திராட்சையில் இரும்பு, பொட்டாசியம், காப்பர், வைட்டமின் பி ஆகியவை உள்ளது.
Alerts
Be the first to know and let us send you an email when Alumni GHSS BSR Health posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.
Subscribe
We will notify you when anything happens in Sathyamangalam.