NKA media
முயற்சி என்பது விதை போல் அதை விதைத்துக்கொண்டே இரு முளைத்தால் மரம்🌲 இல்லையேன்றால் அது மண்ணிற்கு உரம்
07/09/2026
நல்லூர் கந்தனின் மாம்பழத் திருவிழா
07/09/2026
07/09/2026
மட்/ககு/பேத்தாழை விபுலானந்நா கல்லூரி பாடசாலையின் பழைய மாணவர்களுக்கான விளையாட்டு நிகழ்வுகளானது கடந்த 05/09/2026 சனிக்கிழமை பழைய மாணவர்களுக்கான நடைபவனி நிகழ்வுகளுடன் விமர்சையாக ஆரம்பமாகி 06/09/2026 ஞாயிற்றுக்கிழமை இன்றைய தினம் இறுதி நாள் பரிசளிப்புவிழா நிகழ்வுடன் இனிதே நிறைவு பெற்றது. அந்த இந்த வருடத்தின் ஆண்களுக்கான கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் முதலாம் இடத்தினை 2016 O/L & 2019 A/L Batch ஆண் மாணவர்கள் பெற்று இவ்வருடத்திற்கான "Champions" ஆக மகுடம் சூடி இருந்தனர். மற்றும் இரண்டாவது இடத்தினை இரண்டாவது தடவையாகவும் 2007 O/L & 2010 A/L ஆண் மாணவர்கள் பெற்றிருந்தனர். அத்தோடு பெண்களுக்கான எல்லே சுற்றுப்போட்டியில் முதலாம் இடத்தினை 2011 O/L & 2014 A/L பெண் மாணவிகள் பெற்று இவ்வருடத்திற்கான இரண்டாவது தடவையாகவும் "Champions" ஆக மகுடம் சூடி இருந்தனர்.மற்றும் இரண்டாவது இடத்தினை 2021 O/L 2024 A/L பெண் மாணவிகள் பெற்றிருநஂதனர்.
இந்த போட்டிகளிலே பல Batch சார்ந்த அணிகளும் கலந்து விளொயாட்டு போட்டிகளை சிறப்பித்திருந்தனர்.
நன்றி.
07/09/2026
பேருந்து பயணமும்... பிரயாணிகளின் மனக் குமுறலும்! 🚌💔
நேற்று கல்முனையிலிருந்து திருகோணமலை நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்குச் (CTB) சொந்தமான பேருந்தில் தாழங்குடாவிலிருந்து சித்தாண்டி வரை சுமார் ஒரு மணி நேரப் பயணம் மேற்கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டது.
அந்த குறுகிய நேரப் பயணத்தில், எமது பொதுப் போக்குவரத்து சேவையில் நிலவும் ஒரு கசப்பான உண்மையையும், நடத்துனரின் அநாகரிகமான போக்கையும் நேரடியாகக் காண முடிந்தது.
பேருந்தில் நீண்ட தூரப் பயணம் (Long trip) மேற்கொள்பவர்கள், குறுகிய தூரப் பயணம் (Short trip) மேற்கொள்பவர்கள் எனப் பலதரப்பட்ட மக்களும் நிறைந்திருந்தனர். ஆனால் அங்கு நடந்த சம்பவங்கள் தான் மனதை மிகவும் வேதனைப்படுத்தியது.
நீண்ட தூரப் பயணிகளுக்கு மட்டுமே ஆசனமா?
நீண்ட தூரப் பயணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவது நியாயமாக இருந்தாலும், குறுகிய தூரப் பிரயாணிகளைப் பயணிகளாகவே மதிக்காத ஒரு சூழல் அங்கு நிலவியது.
நடத்துனரின் வார்த்தைப் பிரயோகங்கள்:
ஆசனம் கோரிய அல்லது நின்றுகொண்டு பயணித்த குறுகிய தூரப் பயணிகளை நோக்கி நடத்துனர் பயன்படுத்திய சொற்கள் மிகவும் மனவேதனை தருவதாகவும், மரியாதையற்றதாகவும் இருந்தது. "குறுகிய தூரம் தானே போறீங்க... நகருங்க!" என்ற தொனியிலான அவரது நடவடிக்கைகள் அங்கிருந்த பலரையும் சங்கடப்படுத்தியது.
எமது கேள்வி என்னவென்றால்:
பொதுப் போக்குவரத்து என்பது அனைவருக்கும் பொதுவானது அல்லவா? கட்டணம் செலுத்திப் பயணிக்கும் ஒவ்வொரு பயணி குறைந்தபட்ச மரியாதையும் சௌகரியமும் கிடைக்க வேண்டாமா? குறுகிய தூரம் பயணிக்கிறார்கள் என்பதற்காக அவர்களின் சுயமரியாதையை நடத்துனர்கள் உரசிப் பார்ப்பது எந்த வகையில் நியாயம்?
நிர்வாகம் இது போன்ற ஊழியர்களின் அணுகுமுறைகள் குறித்து கவனம் செலுத்த வேண்டும். நடத்துனர்களின் அநாகரிகமான பேச்சும், பாகுபாடு காட்டும் நடவடிக்கைகளும் பொதுமக்களுக்கு பெரும் மன உளைச்சலையே தருகின்றன.
30/08/2026
36ஆவது இளைஞர் தேசிய கூடைப்பந்தாட்டப் போட்டியில் மட்டக்களப்பு மாவட்ட அணி சம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
பல ஆண்டுகளுக்குப் பின்னர் தேசிய இளைஞர் கூடைப்பந்தாட்ட அரங்கில் மட்டக்களப்பு மாவட்டம் மீண்டும் சம்பியன் மகுடத்தை சூடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
01/06/2026
வானவில் விளையாட்டுக் கழகம் பெருமையுடன் நடாத்தும் மாபெரும் வலைப்பந்தாட்டச் சுற்றுப் போட்டி 2026/06/13 அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்
30/05/2026
வரலாற்று சிறப்பு மிக்க
கோராவெளி ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயத்தின்
திருக்குளித்திப் பெருவிழா – 2026 ✨
இன்றைய முதல் நாள் கதவு திறத்தல் நிகழ்வுகள், ஆன்மீக உணர்வுகளும் பக்தி பரவசங்களும் நிரம்பிய சூழலில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. 🙏🏻🔔
அம்மனின் திருவருளைப் பெற ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டதுடன், ஆலய வளாகம் முழுவதும் பக்தி வெள்ளம் பெருக்கெடுத்தது. 🪔🌺
26/05/2026
விஸ்கட்டுடன் நொருங்கி போன வட்டா. சித்தாண்டியில் சம்பவம் 2026/05/26
25/05/2026
கல்குடா வலய விளையாட்டுப் போட்டியின் 5 ஆம் நாள் நிகழ்வுகள்
22/05/2026
விளையாட்டு ஒரு மனிதனை பூரணமாக்கும் 🔥💥
கல்குடா வலயம் 2026 💥💥💥💥
வலயமட்ட மெய்வல்லுனர் போட்டிகளின் சில பதிவுகள்
Website
Address
Batticaloa
Alerts
Be the first to know and let us send you an email when NKA media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.
